Wikipedia

Search results

Monday, November 3, 2014








q />







1.முன்னுரை/Introduction

Any book on INDIAN PHILOSOPHY deals with the Vedas, Bhagavat Gita, Upanishads,
Ramayana, Mahabharata ,Buddhism, Jainism and other 'orthodox-systems'. All of them are:
Topics based on the Northern part of India – Aryan/Vedic. The authors of such books , perhaps,
took it for granted that the ancient Indian thinkers had no other approach in interpreting
the life of the humans. The rich civilization of the Dravidians and their matured thinking
on human life is not considered as Indian philosophy or philosophy.


இந்தியத் தத்துவங்கள் பற்றிய எந்த ஒரு நூலை எடுத்தாலும் அவற்றில் கருதப்படுபவை வேதங்கள்,
பகவத்கீதை,உபநிடதங்கள்,இராமாயணம்,மகாபாரதம்,புத்தம்,சைனம் மற்றும் பல ' பழமைக் கருத்துக்கள்'.
அவை அனைத்தும் வடஇந்தியாவை மையமாகக் கொண்டவை- ஆரிய/வேதக் கருத்துக்கள். ஒருவேளை
இந்நூலாசிரியர்கள், பழங்கால இந்தியத் துணைக்கண்டத்தில் மேற்குறிப்பிட்ட நூல்களைத் தாண்டிய,மனித
வாழ்க்கையைப் விளக்கும், நூல்கள் வேறில்லை என எண்ணினர் போலும்.திராவிடர்களின் உயர்ந்த
நாகரிகமும் அவர்களுடைய முழுமை பெற்ற சிந்தனைத் திறனும் அந்நூலாசிரியர்கள் பார்வையில்
இந்தியத் தத்துவமாகவோ அல்லது தத்துவமாகவோ தோன்றவில்லை.



But the Vedic Aryans were shrewd enough to recognize the knowledge and
the cultural advancement of the Dravidians (Tamils).This is seen from the way
they named the God of knowledge as Dakshinamurthy, the southern God (of knowledge).
This deity will always be placed facing the South where the Dravidian land is.


ஆயினும் கெட்டிக்கார,வேதகால ஆரியர்கள் திராவிட இனத்தவரின் நாகரிக வளர்ச்சியை அறிந்துதான்
இருந்தார்கள். இது அவர்கள் தட்சிணாமூர்த்தி என்ற அறிவு,ஞானத்திற்கான கடவுளை தென்திசை நோக்கி
வைத்த வகையில் தெளிவாகும். திராவிடர்களின் வசிப்பிடம், திராவிடத் தமிழர் நாடு,தென்திசையில்
அல்லவா உள்ளது.


Aryans acquired their knowledge from others is signified in this vedic sloka
Ano Bhadraaha Kritao Yantu ishvataha
let noble thoughts come to us from all directions.

ஆரியர்களுடைய அறிவும், கருத்துக்களும் பிறரிடமிருந்து பெற்றவையே என்பது பின் வரும் சுலோகம்
மூலம் விளங்கும்.

"எல்லா திசைகளில் இருந்தும் நல்ல கருத்துக்கள் நம்மை வந்து அடையட்டும்"


Having acquired such knowledge heard along the path of their migration,
they claimed original authorship of such ideas. Ayurveda, Bharata Natyam,carnatic
music are all examples. Even today,these arts and science are practiced only in
the peninsular india,proving their origin.

Can we say that because Sankara, Ramanuja , and the Madhva were born in
the Dravidian land, they were able to give comparatively better and much
accepted commentaries for the Brahma-sutras due to their familiarity of the
Dravidian knowledge and culture ?


ஆரியர்கள் இந்தியாவில் குடியேறி, வரும் வழியெங்கும் கேள்விப் பட்ட (sruthy) புதுப்
புது எண்ணங்களையும்,கருத்துக்களையும் பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றைத் தங்களது சொந்தக் கருத்துக்களாகப்
பதிவு செய்தனர். அதற்கு ஆயுர்வேதம், பரத நாட்டியம், கர்நாடக இசை, சோதிடம் முதலிய நூல்கள் சில
உதாரணங்களாகும். இன்றுவரை இந்தக் கலைகளும், விஞ்ஞானமும் இந்தியாவின் தென்பகுதியில்தான் அதிகமாக
புழக்கத்தில் உள்ளன என்பது கண்கூடு.

திராவிட மண்ணில் பிறந்து திராவிட நாகரிகம், பண்பாடு தெரிந்து வளர்ந்ததால்தான் ஆதிசங்கரர்,
இராமானுசர், மாத்வர் ஆகியோரால் பிரம்ம சூத்திரம் என்ற நூலுக்கு எழுதப்பட்ட உரைகள், ஏனைய
உரைகளை விடவும் உயர்வாகக் கருதப்படுகிறது என்று சொல்லலாமா?


ThirukkuRaL (kuRaL) , the book of Dravidian philosophy, PHILOSOPHY OF
PENINSULAR INDIA
. is a compendium of many things pertaining to human values
and thought. They are brief and precise,well written without any vagueness or
confusion either in meaning or syntax. The verses are direct in their concept and
clear in their meaning.


திராவிடர்களின் தத்துவ நூலான திருக்குறள், தமிழனின் தத்துவம்,மனித இனத்திற்கான
உயர்ந்த கொள்கைகள், கருத்துக்கள்,சிந்தனைகள் முதலானவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.
குறட்பாக்கள் சுருக்கமாகவும், துல்லியமாகவும்,நன்கும் எழுதப்பட்டவை.வார்த்தை அமைப்பிலோ, பொருளிலோ
குழப்பமில்லாதவை,தெளிவானவை.சொல்லப்படும கருத்து நேரிடையாகவும், பொருள் தெளிவுடனும்
இருப்பவை.

kuRaL is a book that does not deal with any speculative concepts, as found
in the Upanishads . Speculation gives raise to multiple interpretations and the
possible conflicts. They ultimately divide the society they intend to enrich.
The vagueness and speculative character encourages people with vested interests
to meddle with the text by inserting passages.


குறட்பாக்கள், உபநிடதங்களைப் போல், கற்பனைகளைக் கருத்தாக்கிக் கூறவில்லை.கற்பனைக்
கருத்துக்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்கட்கு உட்பட்டு, படிப்பவரையும, கேட்பவரையும் குழப்பத்தில்
ஆழ்த்தும். சமூக நன்மைக்கென்று சொல்லப்படும் இது போன்ற நூல்கள் முடிவில் சமூக ஒற்றுமையையே
சீர்குலைத்து விடுகிறது. இது போன்ற தெளிவற்ற கற்பனைகள், சுயநலமிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப
இடைச்செருகல்கள் ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது.

In the third part Kaamathup_paal ( காமத்துப்பால் ) of kuRaL, the poet tells about
two stages through which a young boy and girl unite in wedlock.

The first stage is when the boy and girl start meeting without the knowledge
of elders. It is called kaLavu ( களவு). The dating stage- Dravidian style.

Later they enter into wedlock -a stage called karpu (கற்பு) - when they marry and start
living together and raise a family. The marriages are love marriages.

Then it was an accepted form of marriage. So we see a well structured society
with freedom for men and women. The verses of kuRaL brings out a picture of a
sophisticated , matured society that was the Dravidian Tamils , thousands of years ago.


ஒரு ஆணும் பெண்ணும் திருமண வாழ்வில் இணைவதில் உள்ள இரண்டு நிலைகள் பற்றிக்
கூறுவது திருக்குறளின் மூன்றாவது பகுதி, காமத்துப்பால். பையனும் பெண்ணும் மூத்தவர்களுக்குத் தெரியாமல்
தனியே சந்திப்பது முதல் நிலை, களவு எனப்படுவது. இது திராவிட மக்களின் dating எனலாம். அடுத்த
நிலையில் அவர்கன் மணவாழ்வில் இணைகிறார்கள். இந்த நிலை கற்பு எனப்படுகிறது. இருவரும் மண
வாழ்வில் ஈடுபட்டு குடும்பத்தை பேணுவர். திருமணங்கள் காதலில் தொடங்குகிறது.

இது போன்ற திருமணங்கள் அந்தக் காலத்தில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டன. நல்ல
வரையறுக்கப் பட்ட நடைமுறைகள் கொண்டதாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிட சமூகம்
திகழ்ந்தது.

kuRaL is dated around 200 BC . So we can safely conclude that the Tamil society
was well advanced , as depicted in the verses of kuRaL, many centuries earlier than kural.
Kural, a book which is perfectly relevant even to-day after 2000 years and more, must be
taken into account to understand the perfection the society might have attained earlier
than 2000 years. Such an evolved society in a remote antiquity shows that their culture
has thrived in that state for many centuries prior to these works.


திருக்குறள் கி.மு. 200 ம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாகக் கருதப் படுகிறது. ஆதலின் இதற்கு பல நூறு
ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச் சமூகம், திருக்குறளில் கண்ட வண்ணம், மிகவும் முன்னேறிய நிலையில் இருந்ததாகக்
கருதலாம். 2000 ஆண்டுகள் கழிந்த பின்னும், திருக்குறளிலே சொல்லப்படுகிற கருத்துக்கள் இன்றும் முழுமையாக ஏற்றுக்
கொள்ளப் படுகிறது. இதனடிப்படையில் சிந்தித்தால் திருக்குறள் எழுதப்பட்ட காலத்திற்கு பலப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்னரே தமிழ்ச் சமூகம் நம்முடைய இன்றைய நிலைக்கு இணையான சிந்தனை, நாகரிகம் ஆகியவை பெற்று திகழ்ந்தது
எனத் தீர்மானமாகக் கொள்ளலாம்.

A work of grammar is attempted only after the literature matures.
( இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்). kuRaL has to be taken in the group of grammar as
it is a compendium of good practices prevailed in the region and followed by the people and
explains the meaning of life in short couplets.


ஒரு மொழியில் இலக்கியங்கள் பெருகி முழுமை பெற்ற பின்னர்தான் அந்த மொழியின் இலக்கணம்
தோன்றும். ( இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்) திருக்குறள் ஒரு (வாழ்க்கையின்) இலக்கண
நூலாக அமைகிறது.அதில் அன்றைய சமூகத்தில் பின்பற்றப் பட்ட நல்ல நெறிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை
சிறு குறட்பாக்களாகத் தொகுத்து வழங்கப் பட்டு உள்ளன.

The works of Tamil scholars of those earlier periods are lost either due to sea upheaval
which entered the land and destroyed or due to wanton destruction by people who were jealous.
Had the previous works were available, the Dravidian culture, its glory and perfection might
have been established with much more authority and may be dated back to few more millenium
earlier.

அந்த நாளையத் தமிழறிஞர்கள் எழுதிய நூல்களில் பெரும்பாலானவை கடல் சீற்றத்தாலோ அல்லது தமிழ்
சிந்தனையின் முழுமை, பெருமை ஆகியவற்றைப் பொறுக்கமாட்டாதவர்களின் வன்முறையாலோ அழிந்து போயின.
அந்த நூல்கள் நம்மிடையே இருக்குமானால் தமிழ்ச் சமூகத்தின் பெருமை முழுமை ஆகியவற்றைத் தெளிவாக நிறுவ
இயலும். அதோடுத் தமிழர் நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்பதும் விளங்கும்.


Bhagavat Gita (Gita) is also an old treatise on the meaning and purpose of human life. It
is supposed to be an epitome of the Upanishads.

As there is no attempt in the past to include kuRaL as part of Indian philosophical thought ,
we try to give an account of the philosophy of kuRaL , THE PHILOSOPHY OF PENINSULAR INDIA.

பகவத்கீதையும் ஒரு பழமையான நூலாகும். மனித வாழ்வின் பொருளும் பயனும் பற்றி விளக்கும் சிறந்த நூல்.
கீதை உபநிடதங்களின் சாரமாகும். இது நாள் வரை குறள் இந்தியத் தத்துவச் சிந்தனைகளின் ஒரு பகுதியாகக்
கருதப்படவில்லை. இந்தக் கட்டுரை குறளின் தத்துவங்களை விளக்க முற்படுகிறது:

தமிழனின தத்துவம் - திருக்குறள்_அறம்


This work does not sit in judgment of which one is superior than the other. Both are superior
on their own right. Otherwise they might not have survived this long and still continue to inspire
mankind.

Our attempt here is to show that Dravidian Tamil-thinking is completely distinct from the Aryan
Vedic way of thinking when it comes to their philosophy of life. This is done by relying on kuRaL and
comparing its views with Gita. kuRaL also expresses its views on Vedic beliefs. So such a comparison
will be enough to establish the distinct and comprehensive philosophy of the Tamils.

குறள், கீதை ஆகிய இரண்டில் எது உயர்ந்தது என்ற விவாதத்தில் இந்தக் கட்டுரை ஈடுபடவில்லை.
இரண்டு நூல்களுமே அதனதன் வகையில் பெருமை உடையவை. இல்லாவிடில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து
மனித இனத்தின் வழிகாட்டிகளாக அவை திகழ்ந்து கொண்டிருப்பது இயலுமா?

மனித வாழ்வின் தத்துவங்கள் பற்றிய சிந்தனையில் குறள் தனித்துவமான கருத்துக்கள் கொண்டது. அவை
ஆரிய சிந்தனையிலிருந்து மாறுபட்டவை என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.குறட்பாக்களையும்,
கீதையின் பாடல்களையும்( சுலோகம்) ஒப்பு நோக்கி, குறள் ஆரிய வேதத்தின் கருத்துக்கள், சிந்தனைகளினின்றும்
மாறுபட்டது என்பதனை விளக்குவோம். இதன் மூலம் தமிழனின் தத்துவச் சிநதனைகள் தனித்துவம் கொண்டது,
முழுமையானது என்பதனை நிறுபுபோம்.

This is done in two planes:

1. ThirukkuRal Vs Bhagavat-Gita: we establish that KuRal rejects the Vedic basics like the
karma, metempsychosis, Moksha (Brahman) , the individual soul and the four-fold division of society.

2. ThirukkuRal and Bhagavat-Gita: As works emanating from the same sub-continent, we try to bring
out some of the striking similarities of approach between KuRal and Gita in this section (the list is
not exhaustive). Individual soul and Brahman or Moksha are the central themes of Gita. The society and
compassion to the poor and needy, which gives a recognition , fame to the individual is what KuRal
emphasizes. We establish a parallel between the concept of the Brahman and the society through chapter 11,
viswaroopa dharsan, of Gita. Also we discuss how the concept of Moksha to the individual soul is dealt
with differently in KuRal without any speculative reasoning.


இவை இரண்டு நிலைகளில் விவாதிக்கப் படும்.

1. திருக்குறளா? பகவத் கீதையா?
திருக்குறள் ஆரிய வேதக் கருத்துகளான கர்மா, மறுபிறவி,மோட்சம் ( பிரம்மன், பரமாத்மா), தனி மனித ஆத்மா,
நால்வகை வர்ணங்கள் ஆகியவற்றை ஏற்கவில்லை என்பதை நிறுவுகிறோம்.

2. குறளும் கீதையும்

ஒரே துணைகண்டத்தில் தோன்றியவை ஆதலின், இவ்விரு நூல்களிலும் தோன்றும் ஒன்றுபட்ட
கருத்துக்களை விவரிப்போம். (இந்தப் பட்டியல் முழுமையானதல்ல). கீதையில் தனிமனித ஆத்மாவும் பிரம்மனாகிய
மோட்சமும் முக்கிய இடம் பெறுகின்றன. சமூகம், வறியவர்கள் முதலியோரின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி
திருக்குறள் கூறுகிறது. சமூகத்தில் புறக்கணிக்கப் பட்டோருக்கும், வறியவருக்கும் உதவுவதால் ஒருவருக்குக் கிடைக்கும்
மகிழ்ச்சி,புகழ்,பெருமை ஆகியவற்றைத் திருக்குறள் வலியுறுத்துகிறது. மோட்சம் என்ற பிரம்மனுக்கும் திருக்குறளில்
பேசப்படும் சமூகத்திற்கும் இடையேயான கருத்து ஒற்றுமையை கீதை பதினொன்றாவது அதிகாரமான விசுவரூப தரிசனம்
மூலம் விவரிக்கிறோம். அத்துடன் மோட்சம் என்கிற கருத்து எப்படி திருக்குறளில் வித்தியாசமாக எவ்விதக் கற்பனைகளும்
இன்றி விளக்கப் படுகிறது என்பதை விவாதிப்போம்.


The kuRaL's theme of 'The purpose of life is to get an eternal glory by service to the society'
is transformed in Gita into the liberation of the soul, following the tenets of the scriptures , merging
with the Brahman, an eternal bliss or silence'.The concepts of the three 'gunas' , three 'yogas' and
equanimity are all inspirations from kural .


குறளின் அடிப்படைக் கொள்கையான "வாழ்க்கையின் இலக்கு சமூகத்தில் வறியோருக்கு உதவுவதன்
மூலம் இறப்புக்குப் பின்னும் பெறும் அழியாப் புகழ் (எச்சம்)" என்ற கருத்து கீதையில் கற்பனையாக " இறப்புக்குப்பின்
தனிமனித ஆத்மா மோட்சத்தை அடைந்து நிம்மதி அடைவதே" என்று மாறுபடுகிறது என்றும் விவாதிப்போம். மூவகை
குணங்கள்( சத்துவ ,இராசச,தாமச), மூவகை யோகங்கள், பலன் கருதாமை,நடுவு நிலைமை ஆகியவை எப்படி இரு
நூல்களிலும் காணப்படுகின்றன என்று கூறுவோம்.


2.குறளா? கீதையா?/ ThirukkuRaL vs Gita


Gita relies on the concepts of the karma, metempsychosis, Brahman and the individual soul for its
explanation of the human life. The aim of one's life is to escape a rebirth and to attain Moksha.
Only the body dies. The soul is immortal and it is affected by the actions of the body of the person
it resides (karma). Because of such actions the soul is destined to have another birth. This cycle
of births will end only when the soul is not afflicted by the actions of the body (person) it resides.
To reach such a state and escape further birth the individual must lead a life as prescribed by the
Manu-Dharma ([2] 4.31, 4.32) 9.3].The person who is detached from the fruits of action gets Moksha.
([2] 2.70 – 2.72). In that state the individual soul merges with the Brahman.

கீதை மனித வாழ்க்கையின் பொருளை, முற்பிறவிப்பலன்,இறப்புக்குப்பின்னும் பிறவிகள் (மறுபிறவி), பிரம்மன் (மோட்சம்,பரமாத்மா), தனி மனிதனின் ஆத்மா (சீவாத்மா) இவற்றின் அடிப்படையில் விளக்குகிறது. மனித வாழ்வின் குறிக்கோள் மறுபிறவியைத் தவிர்த்து
மோட்சம் அடைவது ஆகும். இறப்பு உடலுக்கு மட்டும்தான். மனித ஆத்மா அழியாதது.ஆத்மா அது குடி கொண்டிருக்கும் உடலின்
செயல்களால் பாதிக்கப் படுகிறது. அந்தச் செயல்களின் தன்மைக்கு ஏற்ப மறு பிறவி எய்துகிறது. இது பிறவிப் பலன் அல்லது கர்மா
எனப்படும். ஆத்மா மேற்சொன்ன செயல்களினால் பாதிக்கப்படாமல் செயல்படும் போது மோட்சம் அடைகிறது.


Gita is written in the form of a dialogue between the Lord Krishna and his disciple Arjuna.
Arjuna raises his doubts about how to conduct himself in life and the Lord answers them and clears
the doubts of his disciple. One such question Arjuna asks is in the minds of everyone who believe in
a God, a God who is supposed to redeem them from all sins and worries. In everyday happenings we see that
some good and honest persons suffering, sometimes the suffering has no end and hurts the individual for
the rest of one's life. On the other hand we see the affluence and happiness of some who are cunning and
wicked enjoy health, wealth and prosperity. They are not penalized by the God for any of their mistakes.
This type of everyday happening perplexes our minds over the nature and purpose of a God. Our faith is under
a cloud. Our expectation of a redeeming God does not fructify. Arjuna raises this question to the Lord ,
which is bothering our minds : Arjuna wishes to know from Lord Krishna the fate of the aspirant who fails
to realize the Supreme in spite of his faith and sincerity.

கீதை கிருஷ்ணருக்கும் அவரது சீடனான அர்ச்சுனனுக்கும் இடையேயான உரையாடலாகத் தொகுக்கப் பட்டுள்ளது. வாழ்க்கை வாழச்
சரியான வழிகளை அர்ச்சுனன் கேட்க அவனுடைய கேள்விகளுக்குப பகவான் விளக்கிப் பதில் அளிக்கிறார்.அர்ச்சுனன் கேட்கும் பல
கேள்விகளில் ஒன்று தன்னை துன்பங்கள், கவலை, பாவங்கள் ஆகியவற்றில் இருந்து தான் நம்பி வணங்கும் கடவுள் காப்பாற்றிக்
கரையேற்றுவார் என்று நம்பும் ஒவ்வொருவர் மனதிலும் இருப்பது ஆகும். நல்லவர்களும், நேர்மையானவர்களும் பல சமயங்களில்
துன்பங்கள் அடைவதும், அத்தகைய துன்பங்கள் சில சமயம் நிரந்தரமான இழப்பை கொடுப்பதும், அதே சமயம் தந்திரசாலிகளும்
நயவஞ்சகர்களும் வாழ்க்கையின் உடல்நலம்,பணம், செல்வாக்கு அனைத்தும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதும் நம் அன்றாட
வாழ்க்கையில் பார்க்கிறோம்.தவறு செய்தவர்களைக் கடவுள் தண்டிக்கவில்லை. இவ்விதம் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள்
நம் வாழ்க்கையில் கடவுளின் தன்மை, அவசியம் ஆகியவற்றில் நம்மைக் குழப்பி விடுகிது. நம் நம்பிக்கை தளர்கிறது. நம்மைக்
காப்பாற்றும் என்ற கடவுள் அருள் கைகூடுவதில்லை. நம் மனதை உறுத்தும் இதே கேள்வியை அர்ச்சுனன் கிருஷ்ணரிடம்
கேட்கிறான். உண்மையான கடவுள் நம்பிக்கையும், நேர்மையும் இருந்தாலும் கடவுளின் கருணையைப் பெற இயலாதவனின்
கதி என்ன? என்று அர்ச்சுனன் கேட்கிறான்.

“Arjuna said:
6.37. He who is unable to control himself though he has the faith, and whose mind wanders away
from Yoga, what end does he meet, having failed to attain perfection in Yoga, O Krishna?

சிரத்தையோடு முயன்று, ஆனால் மனத்தைப் பூரணமாக அடக்க முடியாமல் யோகத்தினின்று நழுவினவன் கதி என்னவாகும் ?

6.38. Fallen from both, does he not perish like a rent cloud, support-less, O mighty-armed
(Krishna), deluded on the path of Brahman?

இரண்டும் கெட்டு (சாந்த சமநிலை யோகமும்,கர்ம யோகமும்),காற்றில் அடிபடும் மேகம் போல் நிலையற்று இறைவழி தப்பி
மலைத்து அழிந்து போவான் அல்லவா ?

6.39. This doubt of mine, O Krishna, do Thou completely dispel, because it is not possible
for any but Thee to dispel this doubt. ”

கிருஷ்ணா! இந்த சந்தேகத்தை நனகு தீர்த்துக் கொடுப்பாயாக. நீயன்றி வேறு யாரும் இதைத் தீர்ப்பார் இல்லை.

The man who is not able to control the events that overcome him in spite of his faith in God, loses
his confidence and wanders away. Such a faithful man fails to attain perfection in his devotion and
attain the mercy of God. What will happen to such a man? Fallen from both in life and faith in God will
not he perish, without support, like a cloud?

Here Yoga means the ways of realizing the mercy of God. (Bakthi, njana, karma are three means,
yogas, of attaining the grace of God, according to the Gita). Now Gita says that the solution for such a
person mentioned by Arjuna, in his query,lies only in his subsequent births. [2] In later chapters also
this idea is emphasized.

ஒருவன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்த பின்னும்,தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளை தடுக்கவோ தப்பிக்கவோ இயலாத நிலையில்,
கடவுள் நம்பிக்கை இழந்து அலைவான். அத்தகைய பக்தன் கடவுளின் கருணையையும், தன் பக்தியின் பலனையும் அடைய இயல்வதில்லை.
அத்தகைய மளிதர் என்ன நிலை அடைவார். வாழ்க்கை, தெய்வ நம்பிக்கை இரண்டையும் இழந்த நிலையில், நாதியற்று, மேகம் போல்
அழிந்து விட மாட்டானா?

இறைவனின் கருணையை முழுவதுமாக அடையும் வழிகளை யோகா என்கிறார்கள்.(கடவுளின் கருணையைப் பெற பக்தி,ஞான,கர்ம
என மூன்று யோகங்கன் கூறப்படுகின்றன.) அர்ச்சுனன் கேட்ட மேற்சொன்ன மனிதரின் தவிப்புக்கு உண்டான தீர்வு அடுத்து அடுத்து வரும்
பிறவிகளில்தான் கிட்ட வாய்ப்பு உள்ளது என்று கீதை கூறுகிறது.கீதையின் அடுத்து அடுத்து வரும் பகுதிகளிலும் இந்தக் கருத்தே வலியுறுத்தப்
படுகிறது.

“6. 40. O Arjuna, neither in this world, nor in the next world is there destruction for him;
none, verily, who does good, O My son, ever comes to grief!

பார்த்தனே! அவன் அழிய மாட்டான்.இங்கும் அழிவில்லை.அவ்வுலகிலும் அவனுக்குக் கேடு இல்லை.நல்வழியில் முயல்பவன் நற்கதி
அடையாமற் போகமாட்டான் . முயற்சி வீண் போகாது.

6.41. Having attained to the worlds of the righteous and, having dwelt there for everlasting
years, he who fell from Yoga is reborn in the house of the pure and wealthy.

அவ்வித யோகத்தினின்று வழுவினவன் நற்கருமங்களுக்கு உரிய புண்ணிய உலகங்களை அடைந்து பல்லாண்டு சுகம் அனுபவித்து
திரு விளங்கும் தூய நற்குடியில் பிறப்பான்.

6.42. Or he is born in a family of even the wise Yogis; verily a birth like this is very difficult
to obtain in this world.

அல்லது அதைவிட மேலாகவும், ஞானம் நிறைந்த யோகிகள் குலத்தில் பிறப்பு எடுப்பான். அதைவிட மேலான பலன் உண்டோ?

6.43. There he comes in touch with the knowledge acquired in his former body and strives more than
before for perfection, O Arjuna!

அதன் மேல் முன்பிறவியில் அடைந்திருந்த வெற்றியைத் தொடர்ந்து மேலும் யோக முன்னேற்றத்திற்கு முயல்வான்.

6.44. By that very former practice he is borne on in spite of himself. Even he who merely wishes
to know Yoga transcends the Brahmic word.”

முன்பிறவியில் அடைந்த பயிற்சி அவனுக்கும் தெரியாமல் அவனை யோக முறையில் இழுத்து கொண்டு செல்வதால் எளிதாக மேற்செல்வான்.
யோகமுறையில் செல்ல வேண்டும் என்கிற விருப்பமே போதும், அவனுக்குப் பயன் தந்து விடும்.

The above verses explains and addresses the doubts
of Arjuna.Instead of helping the faithful human, if not all of humanity, to tread the right path, the
Lord God watches his fall and punishes him with another birth of suffering. It is more cruel to tell that
his sufferings will come to an end in a future birth or births.

மேற்குறிப்பிட்ட சுலோகங்கள் அர்ச்சுனனின் சந்தேகங்களையே விளக்குகின்றன. மனித இனம் முழுவதற்கும் இல்லாவிடினும், தன்னை
நம்பும் பக்தர்களுக்காவது உதவி அவர்கள் நல்வழியில் செல்ல வழி காட்டாது, கடவுள், அவர்கள் துன்பமடைவதைப் பார்ப்பதுடன்,
மேலும் மேலும் பிறவிகள் என்று தண்டிக்கவும் செய்கிறார்.அடுத்து வரும் பிறவிகளில்தான் பக்தரின் துன்பம் தீரும் என்று சொல்வது
கொடுமையிலும் கொடுமையாகும்.

The past births mentioned by the Gita are something the incumbent cannot feel or remember and hence cannot
own it as his own . Even accepting the previous birth and the mentioned deeds or misdeeds, how can the new
life of the present be held responsible for such deeds supposed to have been committed by another life (read,
person) in a previous birth ?

After getting refined over the many births, the perfected soul merges with God without getting
another birth.Thus all perfect souls not returning, the world will always be populated by sinners.
What a pessimistic outlook of the world is given to the believing, faithful, disciple by God !

This reply is not acceptable if one adheres to the teachings of KuRaL .

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 169

The affluence of the deceits and the poverty and fall of the righteous will be lamented and,
remembered respectively.



கீதையில் கூறப்படும், ஒருவரின் முந்திய பிறவிகள் அவர் நினைவிலும் உணர்விலும் இல்லாதது. அதனால் அவை தன்னுடையதாக
அவரால் ஏற்க இயலாது. முற்பிறப்பில் நல்ல, தீய செயல்கள் இருப்பினும் எப்போதோ ஒரு பிறவியில் (யாரோ ஒருவரால்)செய்ததாகக்
கருதப்படும் அவற்றின் விளைவுகளை இந்தப் பிறவியில் எப்படி ஏற்க இயலும்?

பல பிறவிகளில் உழன்று முன்னேறிய தவறற்ற உயர் நிலை அடைந்த மனிதரின் ஆத்மா பிரம்மனிடம் தஞ்சமென மேலும் பிறவிகள்
ஏதுமின்றி இணைந்து விடுகிறது. முன்னேறிய தவறற்ற உயர் நிலை அடைந்த மனிதரின் ஆத்மாக்கள் மறு பிறவி எடுக்காத நிலையில்
இப்பூவுலகு எப்போதும் பாவிகளாலேயே நிறைந்து இருக்கும். தன்னிடம் நம்பிக்கையும், உண்மையும் கொண்ட பக்தருக்கு, கடவுள் காட்டும்,
ஒரு நம்பிக்கையான எதிர்காலம் இல்லாத, உலக வாழ்வு இதுதானா?

இது மாதிரியான ஒரு பதிலை திருக்குறளின் கருத்துக்களை மதிப்போர் ஏற்க மாட்டார்கள்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 169

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுயைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுயைய கேடும் ஆராயத்தக்கவை.(மு.வ)

தீயவர்களுடைய உயர்வையும் நல்லவர்களுடைய தாழ்வையும் நினைக்கும்போது (மனம் பாடு படும் )வருத்தம் மிகும்


If the fall of the righteous is blamed on his sin in a previous birth, it is the most cruel
way of treating the good persons.How can such a good person be a sinner in a previous birth , a
hypothetical and speculative accusation without any supportive evidence ? If it is believed the he was
a sinner ( in a past birth ), who will come to the (now) good person and help him out or rescue him from
his difficulties. What type of society we are building with such concepts ? kuRaL 169 quoted above is
practical and helpful. With the mindset as expressed in the verse it implies that the society will
( or expected to ) act against the deceits and help the righteous.

நல்லவர்களுடைய தாழ்வு அவர் முன்பிறவியில் செய்த பாவங்களால் என்பது நல்லவர்களைக் மிகக் கொடூரமாக நடத்துவதாகும்.
இன்று நல்லவராக இருக்கும் ஒருவர் எப்படி முன்பிறவியில் பாவம் செய்திருக்க இயலும். இது போன்ற கற்பனையான, ஆதாரமற்ற
குற்றச்சாட்டை எப்படி ஏற்பது ? அப்படிப் பட்ட ஒருவர் (முற்பிறவியில்) பாவி என்று கூறப்படுவாரானால், இப்போது நல்லவராக
வாழும் அவருக்கு் துன்பம் வரும்போது உதவ யார் முன் வருவார்கள்? இது போன்ற தீய கருத்துக்களைப் பரப்புவதால் உண்டாகும் சமூகம்
எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டாமா?. மேலே குறிப்பிட்ட குறட்பா 169 சமூகத்திற்கு உகந்தது, நடைமுறைக்கு ஏற்றது.
இந்த மாதிரியான கருத்துக்களுடன் வளரும் ஒரு சமூகம் தவறானவர்களைத் தண்டிக்கும் மனநிலையில் இயங்கும்( அல்லது அப்படி
எதிர்பார்க்கலாம்)

Having said that kuRaL explains the contradictory events as follows: Events that cannot be explained,
anticipated or prevented and escaped from their consequences are generally called Oozh (ஊழ்) in kuRaL.

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும் .380

Oozh is the most powerful force (that can affect a person even with deadly damages) . No other
force is more powerful and one cannot escape its consequences.


kuRaL explains the doubts of Arjuna in terms of Oozh which we see later in this article.

தீயவர்களுடைய உயர்வையும் நல்லவர்களுடைய தாழ்வையும் ஏற்காத திருக்குறள், இது மாதிரியான நிலைக்கான காரணங்களைப் பற்றிக்
கூறும் கருத்து என்ன? நம்மால் விளக்க முடியாத, எதிர்பார்க்கவும் இயலாத, தடுக்கவோ,தப்பிக்கவோ முடியாத நிகழ்வுகளைத்
திருக்குறள் ஊழ் என்ற கூறுகிறது.

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும் .380

ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும்
தானே முன் வந்து நிற்கும்.(மு.வ)

மனிதவாழ்வில் ஊழை விட வலிமையுள்ளதான நிகழ்வு ஏதுமில்லை. ஒரு வழியில் தவிர்க்க முடிந்தாலும் ஊழ் வேறு வழியில் தன்
வலிமையைக் காட்டி விடும்.

அர்ச்சுனனின் கேள்விக்கு பதில் ஊழ் என்கிறது குறள். ஊழ் பற்றி விரிவாக இந்த கட்டுரையின் பின் பகுதியில் காண்போம்.


In later parts of this article we discuss about the concept of metempsychosis
(previous birth, next birth, reincarnation of the individual soul). We have to give a new interpretation
for some of the words occurring in kuRaL (இம்மை,மறுமை,எழுமை,எழுபிறப்பு) .
The word 'இம்மை' was meant as "this (present) birth",'மறுமை' was meant as "the next (coming) birth".
The word 'எழுமை எழுபிறப்பு' was meant as the seven and multiples of seven births (ஏழேழ் பிறவி)
These interpretations are the accepted ones for the words all along.But this interpretation will contradict our
discussion in the later part of this article. So we have to explain it here.

Our hew interpretations are:

The word "இம்மை" means 'here and now', 'today', 'for the present', "the present time".
The word "மறுமை' means 'coming days', 'next day(s)', 'the future'.
The word "பழமை" means ' the past', 'olden days'. This word is used in this sense even to this day.
The word "எழுமை" means 'wake-up', 'start action'.
The word "எழுபிறப்பு" means waking-up' ("விழிப்பது போலும் பிறப்பு"- குறள்).
The phrase "எழுமை எழுபிறப்பும்" means (excepting the time of sleep) all the acting moments , whenever on acts,except in sleep.

We have, in Tamil country, many scholars who questioned many of the Aryan concepts of Moksha
and. Metempsychosis.

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெ ய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ 10
( அழுகணிச் சித்தர் )
Having been born in this wretched world, I do not know any way of attaining the
Vedantic Moksha. If one can know the way of attaining Vedantic Moksha, then there won't be any
soul in any womb nor will the earth have any inhabitants.


This is the view of the Dravidians about the concept of Moksha. They not only do not believe it,
they also bring out the contradiction it brings about.

இந்த இடத்தில், பின்வரும் பகுதிகளில் கூறப்படும் முற்பிறவி, மறுபிறவி ஆகியவற்றில் வரக் கூடிய சில குழப்பங்களைத் தவிர்க்க
சிறு விளக்கம் தேவைப்படுகிறது.
இம்மை, மறுமை என்ற கருத்துக்கள் திருக்குறளில் பல இடங்களில் கூறப்படுகிறது. அதன் பொருள் முறையே இப்பிறப்பு, மறுபிறப்பு என
நாம் இதுவரை ஏற்றுக் கொண்டோம். இந்த விளக்கம், இக்கட்டுரையின் பிற பகுதிகளிலிருந்து முரண்படுகிறது. அதை இப்போது
விளக்குவது அவசியம் ஆகிறது.

இம்மை என்றால் இப்போது, இன்று,நிகழ்காலம் எனப் பொருள் கொள்ள வேண்டும்.
மறுமை என்றால் மறுநாட்கள், வரும் நாட்கள், எதிர்காலம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
பழமை என்றால் கடந்தகாலம் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்தச் சொல் இப்போதும் வழக்கில் உள்ளது.
எழுமை என்றால் (செயல்பட)எழுதல்,செயல்படுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
எழுபிறப்பு என்றால் விழித்திருத்தல் ("விழிப்பது போலும் பிறப்பு"- குறள்)என்று பொருள் கொள்ள வேண்டும்.
எழுமை எழுபிறப்பும் என்றால் (உறங்கும் நேரம் தவிர) செயல்படும் போதெல்லாம் என்று பொருள் கொள்ள வேண்டும்.


தமிழ்ச் சமூகத்தில் அறிஞர் பெருமக்கள் இடையே மறுபிறவி, மோட்சம் போன்ற ஆரியக் கருத்துக்கள் ஏற்புடையாதாக இருக்கவில்லை.

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ
10
( அழுகணிச் சித்தர் )
இது திராவிடர் சமூகம் கொன்ட மோட்சம் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும் ஒரு பாடல்.

மோட்சம் என்ற கருத்தை ஏற்காதது மட்டுமல்ல அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் கூறுகிறது.


3.முற்பிறவிப் பலன்/ Karma


Having seen above as to how the individual is helped by the Lord God with repeated births to attain
happiness and peace, salvation, now let us see what KuRaL has to say about karma and reincarnation of
the soul, wherein lie a possible liberation for the sinners.

KARMA : At the time of death the individual soul takes with it all the remnants of its sensual experience
to its next birth. This is karma. This is expressed in the following verse. [2,2a]

15.8. Even as the wind wafts scents from their seats so too the jivatma , which is the controller of the
body etc., taking the mind and the senses from the body which it leaves behind forthwith migrates to the
body which it acquires.

கீதையில், பக்தன் மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றுடன் வாழ்ந்து இரட்சிக்கப்பட பல பிறவிகளில் உழல வேண்டும் என்று பகவான்
சொன்னதைப் பாரத்தோம். இப்போது, பாவி மனிதர்கள் உய்வதற்கான ஒரு வழியாக கீதை சொன்ன முற்பிறவிப் பலன், மறுபிறவி
பற்றி குறளின் கருத்துக்களைப் பார்ப்போம்.

முற்பிறவிப் பலன்(கர்மா): மனிதன் மரணம் அடையும் போது அவருடைய ஆத்மாவுடன், அவர் உயிருடன் இருக்கும் போது
புலன்கள் வழியாகத் துய்த்த அனுபவங்களின் பலன்களும் செல்கிறது. இதுதான் முன்வினைப் பலன் என்று கூறப்படுகிறது.

இது பின்வரும் சுலோகத்தால் அறியலாம்.[2,2a]
15.8.மலர்களினின்று மணத்தைக் காற்று எடுத்துச் செல்வது போல், அந்த சீவன் உடலை விடும்போதும், மற்றொரு உடலைக்
கொள்ளும்போதும், குணங்களைக் கொண்டு செல்கிறது.


Dravidian thinking is just the opposite , as given below:[1]

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338

The relation between the body and the life ( uyir, soul) in it is like that of a bird and its nest
where it dwells , which flies away, leaving behind the nest to destruction.


Here the bird is the soul, and its nest is the body.

When the bird flies away it totally forgets the nest. There is no continuity. For the next mating season
it may have a nest elsewhere. Old nest is totally abandoned to destruction. Even the chicks hatched by
the birds are forgotten forever. Their relationship is forgotten. Perhaps the grown up chicks may mate
their parent bird in the next season.

The message is clear. The Uyir (life, soul) in the body leaves it at the time of death. It does not take
anything of the body with it as quoted above ([2]15.8.) In other words, the actions of the body are not
chasing the uyir throughout its journey, if at all there is any such journey (rebirth), after the
death of the individual.

Thirukkural rejects karma theory.


திராவிடர் சிந்தனை இதிலிருந்து மாறுபட்டது எந்பதைப் பின்வரும் குறட்பாவில் பார்ப்போம்.[1]

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338

உடலுக்கும் உயிருக்கும் (ஆத்மாவுக்கும்) இடையேயான உறவு ஒரு பறவைக்கும், அந்தப் பறவை, தனியே அழியவிட்டுப் பறந்து
சென்று விடும் அதன் கூட்டுக்கும் இடையே உள்ளது போன்றது.

இங்கு பறவைதான் மனித ஆத்மா. கூடு தான் மனித உடல்.

பறவை கூட்டை விட்டுச் செல்லும்போது கூட்டை முழுமையாக மறந்து விடுகிறது. அத்துடன் எந்த தொடர்பும் இருக்காது. அடுத்து
வரும் (முட்டையிடும்) பருவ காலத்தில் வேறு இடத்தில் கூடு கட்டிக் கொள்ளும். பழைய கூடு முழுதும் அழியும்படியாக விடப்படுகிறது.
பழைய கூட்டில் பொரிக்கப் பட்ட குஞ்சுகள் பற்றி எந்த ஒரு நினைவும் இல்லாது அற்றுப் போகும். ஒரு வேளை அந்தக் குஞ்சுகளே
பின்னொரு பருவகாலத்தில் தன்னைப் பெற்ற பறவையுடன் இணையலாம்.

குறளின் கருத்து தெளிவாக உள்ளது. மரணத்தின் போது உயிர் (ஆத்மா) உடலினின்று பிரிகிறது.பிரியும் உயிர் கீதையில் சொல்லப்பட்டது
([2]15.8.) போல் தன்னுடன் எதையும் கொண்டு செல்லவில்லை. அதாவது உயிருடன் இருக்கும் போது புலன்கள் வழியாகத் துய்த்த
அனுபவங்களின் பலன்கள் ஆத்மாவை ஒட்டிக் கொண்டு செல்லவில்லை. மறுபிறவியில் (அப்படி ஒன்று இருந்தாலும்) முற்பிறவிப்பலன்கள்
பாதிப்பது இல்லை.
திருக்குறள் பிறவிப்பலன் (கர்மா) என்ற கருத்தை ஏற்கவில்லை, மறுக்கிறது.


Let us see the views of kural metempsychosis. We quote relavent verses from [2]:

மறுபிறவி பற்றிய குறளின் கருத்தினைக் காண்போம்.
இது பற்றிய கீதையின் சுலோகங்களையும் காண்போம்[2,2a]:

2.13 Just as in this body the embodied (soul) passes into childhood, youth and old age, so also does
he pass into another body; the firm man does not grieve thereat.

இந்த உடலில் நாம் குழந்தைதளாகவும்,வாலிபர்களாகவும் வயோதிகர்ளாகவும் வெவ்வேறு பருவங்கள் அடைகிறோம். பருவங்கள் மாறி
உடலுருவம் மாறவது போலவே இறந்தபின் வேறு உடலை இந்த உயிர் அடையும்.


2.22. Just as a man casts off worn-out clothes and puts on new ones, so also the embodied Self casts
off worn-out bodies and enters others that are new.

நைந்து போன ஆடைகளைத் தள்ளி விட்டுப் புது உடைகளை அணிவது போல், உடலைக் களைந்து விடுகிறது உயிர்.
களைந்து விட்டுப் புது உடலைப் பூணுகிறது.

14.15. Meeting death in Rajas, he is born among those who are attached to action; and dying in Tamas,
he is born in the womb of the senseless.

ரசோகுணம் தலைதூக்கிய தருணம் மரணம் அடைந்தால் தொழிலாசை மிக்க பிறவி யெடுப்பான்.தமோகுணம் தலைதூக்கியபோது மரணம்
அடைந்தால் ஒருவன் அறிவிலாக் குடும்பம் ஒன்றில் பிறப்பெடுப்பான்

In the following verse of kuRaL goes on further to fully reject the concept of reincarnation of the soul
and Moksha.
ஒருபோதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல 337

Persons who are not able to understand their (present) life (birth) think and talk about many lives
(births). They do not stop there. They talk even of the end of it all (Brahman or Moksha ).


வாழ்வு: this very life (birth) they live
அது ஒரு பொழுதும் அறியார்: They never understand
கருதுப பல ( வாழ்வு ): they talk and consider many more (births)
அல்ல : nay
கோடியும்: including the end of it ( Brahman)

(this interpretation of this verse deviates from standard commentaries. We do not twist any word for its
meaning in our interpretation)

The life of a person starts with one's birth and ends with death. There is nothing before birth or beyond
death.

Thus kuRaL rejects the rebirth of the soul with all past 'karma' attached to it in the new birth. It rejects
Moksha


பின் கண்ட குறட்பா மோட்சம் மறுபிறவி இரண்டையும் ஏற்கவில்லை என்பதையும் பார்ப்போம்.

ஒருபோதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல 337


வாழ்வு : வாழும் இந்த வாழ்க்கையை (பிறவியை)
அது ஒரு பொழுதும் அறியார்: ஒரு நாளும் புரிந்து கொள்ள இயலாதவர்
கருதுப பல ( வாழ்வு ): பேசுவதும்,கருதுவதும் மேலும் பல வாழ்க்கைகளை (பிறவிகளை)
அல்ல : அது மட்டும் இல்லை
கோடியும்: அவற்றின் கடைசியான மோட்சத்தையும் (அல்லவா பேசுகிறார்கள்)

(இந்தக் குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
மனித வாழ்க்கை பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறது. இயற்கையான இந்த இரண்டு நிலைகளுக்கும் (இரு வேறு உலகத்து இயறகை)
அப்பால் வாழ்வில் கருத வேறொன்றுமில்லை.

திருக்குறள் மோட்சம், மறுபிறவி இரண்டையும் ஏற்கவில்லை.


4.மோட்சம்/ Moksha


Having rejected the concept of the reincarnation of the soul and Moksha ; let us turn to the concept of
Paramatman also known as super-soul, Brahman or Moksha

What happens to the individual soul (also known as jivatma) which gets entangled in a cycle birth and death ? According to Gita the soul must attain perfection as mentioned in the scriptures. If it is able to attain
such a stage in a particular birth then it escapes further birth and gets one with the ultimate Lord,
here Lord Krishna (Paramatman or super-soul).This is what the liberation of the soul means, in other words
it is Moksha.

குறள் மறுபிறவி, மோட்சம் இரண்டையும் ஏற்கவில்லை என்று பார்த்தோம். பிரமன், பரமாத்மா என பல பெயர்களால் அழைக்கப்படும்
மோட்சத்தைப் பற்றி மேலும் பார்ப்போம்.
பிறவிகளின் சுழலில் சிக்கித் தவிக்கும் மனித ஆத்மா (சீவாத்மா) முடிவில் என்ன ஆகிறது? கீதையின் கூற்றுப்படி சீவாத்மா பாவங்கள்
இன்றி,(மநு) தர்ம சாத்திரப்படி வாழ்ந்து,ஒரு குறிப்பிட்ட வாழ்வில் முழுமை அடையும்போது, பிறவிச் சுழலில் இருந்து தப்பி பரமாத்மாவிடம் ஐக்கியமாகிறது.

இதை ஆத்மா பிறவித் தளைடிலிருந்து விடுதலை பெறுகிறது என்கிறோம். இதுதான் மோட்சம் அடைதல் என்பது.


5.17: Those whose mind and intellect are wholly merged in Him, who remain constantly established in
identity with Him, and finally have become one with Him , their sins are being wiped out by wisdom ,
reach the state whence there is no return .

புத்தியையும் உள்ளத்தையும் வழிபாட்டையும் பரத்தை நோக்கி நிறுத்தி ஞானத்தால் மாசுகளைத் தீர்த்துக்கொண்டவர்கள் மீளாநிலையை
அடைவார்கள்.

6.43. There he comes in touch with the knowledge acquired in his former body and strives more than before
for perfection, O Arjuna!

அதன்மேல் முன்பிறவியில் அடைந்திருந்த வெற்றியைத் தொடர்ந்து மேலும் யோக முன்னோற்றத்துக்கு முயல்வான்

7.19. : In the last of all births the enlightened soul worship Me, realizing that all this is God.
Such a great soul is very rare.

பல பிறவிகள் எடுத்து மெய்யறிவு அடைந்து வாசுதேவனே அநைத்தும் என்று கண்டு என்னைச் சரணம் அடைகிறான்.இத்தகைய
மகாத்மாக்கள் வெகு சிலரே.

12.6,12.7: "On the other hand those who depending exclusively on Me . And surrendering all actions to Me,
worship me (God with attributes) , constantly meditating on me with single minded devotion . Those, Arjuna,
I speedily deliver from the ocean of birth and death, their mind being fixed on Me.”

ஆனால் செய்யும் செயல்கள் அனைத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டு. என்னையே கதியாகக் கொண்டு என்னையே சிதையாத மன அடக்கத்துடன் தியானித்து உபாசிப்பவர்களை நான் பிறப்பிறப்பு என்னும் சம்சார சாகரத்தினின்று கடைத்தேற்றுவேன். அவர்கள் எனக்குத் தம்
உள்ளத்தை அர்ப்பணம் செய்தார்களே என்று உடனே கைதூகக்கி விடுவேன். பார்த்தனே! அறிவாய்

14.14. If the embodied one meets with death when Sattwa has become predominant, then he attains to the
spotless worlds of the knowers of the Highest.

சத்வ குணம் மேலெழுந்தபோது உடலை விட்டுப் பிரிகிற உயிர் சான்றோர்கள் அடையும் தூய உலகங்களை அடையும்.

kuRaL does not accept the concept of Moksha, where the dead person's soul gets its eternal rest.

புக்கில் அமைந்தின்று கொல்லொ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு புக்கில் அமைந்தின்று கொல்லொ .

The uyir (individual soul) ,which is temporarily attached to the body , is not endowed with a permanent
abode
.

In this verse the poet rejects that the individual soul has a permanent abode .

It has relevance only between the birth and death. KuRaL rejects the concept of Moksha.

குறள் மனிதன் இறந்க பின் பிரம்மனிடம் ஐக்கியமாகும் மோட்சம் என்ற கருத்தை ஏற்கவில்லை.

புக்கில் அமைந்தின்று கொல்லொ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340

உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு புக்கில் அமைந்தின்று கொல்லொ .
உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? (மு.வ)

மேற்கண்ட குறள் ,சீவாத்மாவிற்கு நிலையான வீடு, மோட்சம் என்பது இல்லை என்று கூறுகிறது. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையேயான
வாழ்வில் மட்டுமே சீவாத்மா செயல்படுகிறது.
குறள் மோட்சம் என்ற கருத்தை ஏற்கவில்லை


5.நேதி நேதி/ NetiNeti
Brahman / Soul (Paramatman, Moksha)

A further discussion about the Soul (Paramatman) will add to the above observations and strengthen our
conclusions we have arrived at so far.

A passage from Brihdaranyaka Upanishad has the following to say on the Soul, the Paramatman:
[3] pp516-517:

A question is asked to Yagnavalkya about the nature of Brahman.

Sankara makes the following comment on the question.

3.8.7 “Now, if Yagnaavalkya did not explain It ..........., he would lay himself open to the charge of what is
called in the system of logic 'non-comprehension', if, on the other hand, he tried to explain It, notwithstanding
the fact that It was a thing that could not be explained, he would be guilty of what is called 'a contradiction';
for the attempt to explain what cannot be explained is such a contradiction.”

Thus the question is not answerable either way.

பிரம்மன் என்ற மோட்சத்தைப் பற்றி மேலும் புதிய கருத்துக்களை விவாதிப்போம்.இது இதுவரை நாம் கண்ட கருத்துக்களைப் கூர்மையாக்கி
நாம் கொண்ட முடிவுகளை மேலும் வலுவாக்கும்.

பரமாத்மாவைப் பற்றி பிருஹதாரண்ய உபநிடதத்தில் வரும் ஒரு பகுதியில் கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது:[3] pp516-517
ரிஷி யக்ஞவாக்கியரிடம் ஒரு கேள்வி,பிரம்மனைப் பற்றிய விளக்கம், கேட்கப்படுகிறது.
உரையாசிரியர் (ஆதி) சங்கரர் அந்தக் கேள்வியைப் பற்றித் தன் உரையில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

3.8.7 யக்ஞவாக்கியர் இந்தக் கேள்விக்கு விடையளிக்கா விட்டால் .... கேள்வியைப் புரியும் சக்தியற்றவராகக் கருதப்படுவார். அதல்லாமல்,
கேள்விக்கு விடையில்லை எனத் தெரிந்தும்,கேள்வியை விளக்கி விடையளிக்க முற்பட்டால், "பதிலற்ற கேள்விக்கு விடையளித்தல் முரண்பாடு"
என்ற குற்றத்திற்கு ஆளாவார். எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்கு விடையில்லை.

The question is explained as follows: (“neti neti”)

3.8.8. “He said: ........... the knowers of Brahman say, this lmmutable (Brahman) is that. It is neither
gross nor minute, neither short nor long, neither red colour nor oiliness, neither shadow nor Clarkness,
neither air nor ether, unattached, neither savour nor odour, without eyes or ears, without the vocal organ
or mind, nonluminous, without the vital force or mouth, not a measure, and without interior or exterior.
It does not eat anything, nor is It eaten by anybody.”

Sankara makes the following comment on the reply:

“ This Immutable is not a substance......... , It is devoid of all attributes,.... so what is there
that can be specified, and through what?”

(Sankara was born in the Dravidian land and hence exposed to the local thinking)

3.8.8. அந்தக் கேள்வி (சந்தேகம்) பின்கண்டவாறு விளக்கப்படுகிறது ("இது அல்ல, இது அல்ல"):
"யக்ஞவாக்கியர் சொன்னதாவது: பிரம்மன் மாறாதது.பருத்ததல்ல,நுண்ணியதல்ல, நீளமானதல்ல, குட்டையானதல்ல,சிவப்பு வண்ணமானதல்ல,
பிசுக்கானதல்ல,நிழல் அல்ல,இருள் அல்ல,காற்று அல்ல, வளி அல்ல, (எதனோடும் )ஒட்டாதது,ருசியில்லை, மணமில்லை,கண்,காது,பேசும் சக்தி,
இல்லாதது,ஒளியற்றது,சீவனோ, வாயோ அற்றது,உள்,வெளி அற்றது,அது ஒரு அளவை அல்ல.அது எதையும் உண்ணாது. அதை வேறு எதுவும்
உண்ண மாட்டா."

உரையாசிரியர் (ஆதி) சங்கரர் அந்தப் பதிலைப் பற்றித் தன் உரையில் கீழ்க்கண்டவாறு விமரிசிக்கிறார்.

"அந்த மாறாத ஒன்று பொருள் அல்ல .......... அதை அதன் குணங்களாலும் விளக்க முடியாது. ஏன் எனில் அது குணம் அற்றது....
பின் அதை எப்படி விளக்குவது? எதை வைத்து விளக்குவது? "
(இந்த விளக்கத்தில் பொருள் என்ற சொல் இரு வகைப் பொருளில் (அர்த்தத்தில்) கையாளப்படுகிறது. 1. பொருள்:அர்த்தம், விளக்கம்
2. பொருள்: பார்த்தும் தொட்டும் உணரக்கூடிய திட,திரவ வாயு போன்றவை.)
எப்படிப் பார்த்தாலும் பிரம்மன் ஒரு பொருளே (பொருட்டே) அல்ல

Here the Yagnavalkya is not able establish the nature of the Soul. He can say that nothing can define or
describe the soul. Then how can one accept that the Soul or Paramatman is a real entity or a concept ?
One can just say that one cannot say anything about it. It is just a word of four letters signifying
nothing.

All the above description of the Soul justifies what kuRaL says :

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. 351

பொருள்அல்ல வற்றைப் (பிரம்மனை ஒரு) பொருள்என்று உணரும் மாணாப் பிறப்பு மருளான்ஆம்.

The concept of unending birth-cycle which depends on the meaningless idea of Brahman is purely due to an
unreasonable fear

மாணாப் பிறப்பு = unending birth-cycle
பொருள்அல்ல வற்றை that which is neither a matter nor a concept with a meaning.

This refers to the Brahman.
(பொருள்) means a substance, object,matter, or meaning , attribute.

இங்கு பிரம்மனைப் பற்றி யக்ஞவாக்கியரால் முடிவான கருத்தாக ஏதும் சொல்ல முடியவில்லை. பிரம்மனை எந்த வகையாலும் வரையறுக்க,விளக்க முடியாது என்கிறார். பின் எப்படி பிரம்மனை ஒரு விளக்கக்கூடிய பொருளாகவோ, பார்க்க, உணரக் கூடிய பொருளாகவோ கருத முடியும்? பிரம்மனைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அது பொருளற்ற நான்கு எழுத்துக்களாலான ஒரு வார்த்தை மட்டுமே.
வேலே கண்ட விளக்கங்கள் பிரம்மன் பற்றிய திருக்குறளின் பின் வரும் கருத்தை நியாயப்படுத்துகிறது.

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. 351

அர்த்தமில்லாத, பொருளற்ற பிரம்மனை அடிப்படையாகக் கொண்ட மாளாத பிறவிகள் என்ற கருத்து தேவையற்ற பயத்தினால் வருவதாகும்.

பொருள்அல்ல வற்றை: விளக்கக்கூடிய பொருளாகவோ, பார்க்க, உணரக் கூடிய பொருளாகவோ இல்லாத ஒன்றை
இது பிரம்மனைக் குறிக்கும்
(இந்தக் குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )


The individual soul is deathless is told by the Lord Krishna :

[2,2a] 2.30. “This, the Indweller in the body of everyone, is always indestructible”.
உடலைத் தாங்கும் இந்த உயிரைக் கொல்லப் போவதாக எண்ணி நீ வருந்துகிறாய்.எந்த உயிரையும் நீ கொல்ல முடியாது.

KuRaL takes a different view as seen below:

நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை. 331

The wrongful knowledge and authority acquired by considering those which are not permanent as eternal
is mean.


The mortal life (uyir) is being considered as immortal (soul). Such a faith is of lowly knowledge.

சீவாத்மா அழியாதது என்று கிருஷ்ணர் சொல்கிறார்:
[2a] 2.30. உடலைத் தாங்கும் இந்த உயிரைக் கொல்லப் போவதாக எண்ணி நீ வருந்துகிறாய்.எந்த உயிரையும் நீ கொல்ல முடியாது.

திருக்குறள் இக்கருத்தை ஏற்கவில்லை.

நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை. 331

நில்லாத, அழியக்கூடிய, இந்த உயிரை (சீவாத்மாவை) அழியாதது என்று கருதும் தரம் கெட்ட நம்பிக்கை கடைப்பட்டதாகும்.
(இந்தக் குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )

Having condemned the concept of Brahman and individual soul as meaningless fear and lowly knowledge
what is a truthful and meaningful way of looking at life? kuRaL says that there is no rebirth and one
need not take it seriously. The following verses discuss this view:

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டாப் பிறப்பு. 357

Once ,after a deep consideation , when one realizes the truth; one need not think of the prejudiced
concept of reincarnation.


(It is not the truth).

பரமாத்மா (மோட்சம்), தனி மனித ஆத்மா (சீவாத்மா) இரண்டையும் ,முறையே, பொருளற்ற பயம், கீழான நம்பிக்கை என்ற பின் ,
வாழ்க்கையைப் பற்றி சரியான, உண்மையான பொருள்தான் என்ன? மறுபிறவி என்று ஒன்றுமில்லை, "அதை யாரும் பெரிதாக
எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்கிறது குறள்:

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டாப் பிறப்பு. 357

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா.

ஆழ்ந்து சிந்தித்து உண்மையை உணரும்போது, ஒருதலைப் பட்சமான மறுபிறப்பு என்ற கொள்கையை விரும்பத் (ஏற்கத்) தேவை இல்லை.
(இந்தக் குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )


கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. 356

Those who has understood the truth of life by deep study and knowledge will follow the concept of
denying the reincarnation of the soul.


மற்றுஈண்டு வாரா நெறி = மறுபிறவி மறுப்புக் கொள்கை., The concept of denying reincarnation

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். 233

It is the renown of the person who serve the society as per the tenets of aRam is what is eternal, and
nothing else is.



கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. 356

வாழ்க்கையை வாழ்ந்து அதன் உண்மைப் பொருளைப் புரிந்தவர் மறுபிறவி மறுப்புக் கொள்கையை ஏற்பர்.

மற்றுஈண்டு வாரா நெறி = மறுபிறவி மறுப்புக் கொள்க
(இந்தக் குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். 233

உயர்ந்த புகழல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைத்து நிறக வல்லது வேறொன்றுமில்லை (மு.வ)


6.திருக்குறளின் பார்வையில்../ alternatives of kuRaL


Having denied the concept of the reincarnation of the soul, and the karma theory of the Vedas it
is for kuRaL to answer the question of Arjuna, mentioned earlier in this article.

kuRaL says it is Oozh which is the cause of the problems faced by good and honest people and also the
prosperity of the corrupt and the cunning.

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும். 380

Oozh is the most powerful force (that can affect a person even with deadly damages) . No other force is
more powerful and one cannot escape its consequences.


Thus with all of one's sincere efforts there may be failures and losses. It is inevitable. So one must
attune oneself to accept the reality.

ஆரிய வேதத்தின் கருத்துக்களான முற்பிறவி, பிறவிப் பலன் (கர்மா) ஆகியவற்றை ஏற்காத நிலையில், இக்கட்டுரையின் முற்பகுதியில்
சொன்ன, அர்ச்சுனனின் சந்தேகத்திற்கான விளக்கத்தை விளக்க வேண்டிய நிலையில் குறள் இருக்கிறது.

நல்லவர்களும், நேர்மையானவர்களும் சந்திக்கும் துன்பங்களுக்கும், ஊழலில் ஈடுபடுவோரும்,நயவஞ்சகர்களும் செழித்து வாழ்வதற்கும்
காரணம் ஊழ் என்கிறது திருக்குறள்.

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும். 380

ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும்
தானே முன் வந்து நிற்கும்.(மு.வ)

மனிதவாழ்வில் ஊழை விட வலிமையுள்ளதான நிகழ்வு ஏதுமில்லை. ஒரு வழியில் தவிர்க்க முடிந்தாலும் ஊழ் வேறு வழியில் தன்
வலிமையைக் காட்டி விடும்.

ஒருவருடைய உண்மையான முயற்சிகளுக்குப் பின்னும் இழப்பும் தோல்விகளும் ஏற்படலாம். அது தவிர்க்க இயலாது. எதார்த்தத்தை
ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை ஒவ்வொருவரும் பெறுவதுதான் சரியான (வாழ்க்கை) முறை.


இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். 627

enlightened wise men will not be perturbed by physical and mental pains and tortures. They are part of
human existence.



இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். 628

The person who do not seek after pleasure and regards the problems of life as normal occurences will never
grieve.


[2] 2.15. That firm man whom surely these afflict not, O chief among men, to whom pleasure and pain are the
same, is fit for attaining immortality!

இவற்றைப் பொருட்படுத்தாமல் எவன் பொறுத்துக் கொள்கிறானோ, இன்பத்தையும்,துன்பத்தையும் எவன் ஒன்றாகக் கருதுகிறானோ அவன்
தீரன்.அவனே அமரத்துவத்துக்குத் தகுந்தவன்.

Live life as it occurs.


இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். 627

மேலோர் உடம்பு துன்பத்துக்கு இலக்கானது என்று உணர்ந்து (துனபம் வந்தபோதும்) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்
கொள்ளமாட்டார். (மு.வ.)

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். 628

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வரும்போது துன்பமுறுவதில்லை. (மு.வ)

வாழ்க்கையின் நிகழ்வுகளை எதிர்கொணடு வாழப் பழகு.

Now there is a natural question. Is it fatalism ? Accepting the events and staying without any action on the
part of the individual? But it is not what kuRaL means.

Instead of explaining the reason for one's problems in terms of faith based theories, metempsychosis and
karma, let us accept the problem and undergo the consequences. There is a way of tackling the situation:

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். 620

When one encounter severe and difficult problems (due to bad Oozh ) one must not lose one's composure and
confidence


(உலைவுஇன்றி ): Then one must try hard without giving-up
(தாழாது ): With such a perseverance
( உட்பக்கம் காண்பர்): one can reverse the effects of Oozh.

அடுத்து எழும் ஒரு சரியான கேள்வி: இதுதான் விதியின் செயல் என்பதா? நடப்பது நடந்துதான் தீரும் என ஏற்றுக் கொண்டு வாளா இருப்பதா?
குறளின் கருத்து இதுவல்ல.

நம்பிக்கை , முற்பிறவிப்பலன் (கர்மா), பலபிறவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனக்கு எற்படும் நிகழ்வுகளை விளக்குவதை விடவும்
நிகழ்வுகளின் பலன்களை எதிர்கொண்டு விளைவுகளை ஏற்பதுதான் குறள்வழி. அப்படி வரும் நிகழ்வுகளைச் சமாளிப்பது பற்றி குறள்:

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். 620

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர் (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
(உலைவுஇன்றி ): முயற்சியில் குறைவு இல்லாமல்
(தாழாது ):சோர்வு இல்லாமல்
( உட்பக்கம் காண்பர்) தோல்வியுறச் செய்வர்.

Such a relief or consolation is not there for sufferings due to 'karma'.

Is Oozh the same as karma ? No, says the poet :

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. 374

உலகத்து இயற்கை இருவேறு (பிறப்பு , இறப்பு என்ற இரு வேறு நிலைகள்). திருவேறு தெள்ளியர்
ஆதலும் வேறு

The states of birth and death are the two extremes, in the world, which are natural. It has nothing to do
with one's wealth or knowledge (in this birth).


The poet says that the wealth or knowledge of a person is not due (to his good or bad acts of) his previous
birth, and after death these are not going to affect the dead person anyways. The 'karma' is not used in
explaining the events of a person's life. Birth and death are just natural events.

summing up, it is the efforts of the individual with confidence and composure which bail out the person
of his problems. Also understanding human life as replete with problems, one must learn to live with it.

இது போன்ற துன்பங்களுக்கான ஆறுதல், விடுபடும் முறை ஆகியவை 'கர்மா'வை நம்புவர்களுக்குக் கிடைக்காது.
'கர்மா', ஊழ் இரண்டும் ஒன்றா ? என்றால், இல்லை என்கிறது குறள்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. 374

உலகத்து இயற்கை இருவேறு (பிறப்பு , இறப்பு என்ற இரு வேறு நிலைகள்). திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு .

உலகத்தின் இயற்கையான பிறப்பு, இறப்பு என்ற ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. ஒருவர் செல்வந்தராகவோ,
அறிவுள்ளவராகவோ இருப்பதற்கு முன் சொன்ன நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
பிறப்பு, இறப்பு இரண்டும் இயற்கை ஆனது. உயிர்கள் அனைத்துக்கும் இந்த இரண்டு நிலையும் ஏற்படும். செல்வந்தராவதும்,
தெளிந்த அறிவுடையவராவதும், பிறப்பு அல்லது இறப்பினால் (முற்பிறவி, அடுத்து வரும் பிறவிகளின் பாவ புண்ணியத்தால்) வருவது அல்ல.

தனி மனிதரின் விடாமுயற்சியும்,தன்னம்பிக்கையும்,நிலை குலையாத உறுதியும் மனிதரை துன்பத்திலிருந்து காக்கும். மனித வாழ்வு துன்பம்
நிறைந்தது என்பதை உணர்ந்து, வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்.


பிறவிப் பலன் (கர்மா) என்ற அடிப்படையில், மனித வாழ்க்கையை திருக்குறள் விளக்கவில்லை.


kuRaL conducts its inquiry along a path which is more practical and convincing. This is evidenced
in the chapter 38 on Oozh where Oozh is taken as it is without any explanation for it in terms of religion ,sin or
past birth.

At this point we take an analogy from Mathematics.

When we count integers continuously, where will it end . When mathematicians needed to have such an integer
they have found a solution by creating the concept of an ideal number and called it 'infinity'
Infinity is the greatest of all numbers and every counted (finite) number is always less than infinity. But
this ideal number infinity is not a number in the ordinary sense. You cannot reach it by usual counting. It
will not obey the laws of addition and subtraction.

In the example the use of an ideal number is made without including it with the rest of the pack of numbers.

In dealing with the concept of Oozh (ஊழ் = oozh) kuRaL adopts this technique. Oozh is the most powerful effect affecting all human efforts/actions. No other human effort/act is more powerful enough to outdo it. As our
actions affects us, Oozh also affects us. But it is not amenable to human effort. Beyond this level the practical
poet does not go.

நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் நம்பக் கூடியதாகவும் தன் கருத்துக்களை திருக்குறள் முன் வைக்கிறது. இது ஊழ் என்ற கருத்தை விவரிக்கும்
அதிகாரம் 38 லிருந்து தெரிந்து கொள்ளலாம். மத நம்பிக்கை, பாவ புண்ணியம், ஆகியவற்றின் அடிப்படையில் ஊழ் என்ற கருத்து விளக்கப்படவில்லை.

இது போன்ற ஒரு நிலைமையைக் கணிதவியல் எப்படி விளக்குகிறது எனக் காண்போம்.

ஒன்று. இரண்டு, மூள்று.... என்று கூட்டிக் கொண்டு சென்றால் எண்ணிக்கை எங்கு முடிவடையும்? எண்ணிக்கை முடிவு இன்றி போய்க் கொண்டே இருக்கும். கணிதத்திற்குத் தன் வாதங்களைச் சரியான முறையில் வைக்க, ஒரு முடிவான எண்ணின் தேவை ஏற்பட்டது. இல்லாத ஒரு எண்ணை எப்படி
அடைவது. அது இயலாத காரியம். ஆதலின் அவர்கள் கற்பனையான எண் என்று ஒரு கருத்தைப் படைத்தார்கள். அதற்கு இன்fiனிடி
எனப் பெயரிட்டு விளக்கினர். உலகிலுள்ள எண்கள் அனைத்தும் இன்fiனிடி யை விடச் சிறியதாகும்.எண்ணக்கூடிய எந்தவொரு எண்ணையும் விட
இன்fiனிடி பெரியது. ஆனால் இன்fiனிடி ஒரு எண் அல்ல. அது சாதாரணக் கூட்டல், கழித்தல் விதிகளுக்குள் அடங்காது.இன்fiனிடி யை
இன்fiனிடி யோடு கூட்டினால் வருவது இன்fiனிடி தான். இன்fiனிடி யை மற்ற எண்களோடு இணைத்து கணித இயலின் பல கருத்துக்கள் முழுமையாக்கப்பட்டன. கணிதம் வளர்ந்தது,வளர்கிறது

ஊழ் என்ற கருத்தை விளக்க திருக்குறள் இதே (கணித) வழியைப் பின்பற்றுகிறது. தன் வாழ்வில் ஒருவர் பல விதமான நிகழ்வுகளைச் சந்திக்க
நேரிடுகிறது. அதனால் அவர் வாழ்க்கையில் பல மகிழ்வான தருணங்கள், சோகமான தருணங்கள் நேரிடுகிறது. அவற்றில் சில நிகழ்வுகள்
எதிர்பாரமலும், அதன் விளைவுகளில் இருந்து மீள முடியாமலும் நிகழ்கின்றன. அவை ஏன் நிகழ்கின்றன என்று விளக்க இயலாது.
அம்மாதிரி நிகழ்வுகள் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது. இந்த நேரிடையான உண்மையை குறள் ஏற்றுக் கொள்கிறது. அதை விதி, சாபம் போன்ற கற்பனை வாதத்தால் குறள் விளக்க முற்படவில்லை.



வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

But for the actions of Oozh , which determines one's path of life, one cannot expect anything even from
out of one's accumulation of good deeds (over many births) to attain Moksha.


Here கோடி தொகுத்தார் Means those who claims to have (accumulated over many births and) and got qualified to attain the end (Moksha).

Thus Oozh is different from karma.

So the message of kuRaL is: As there is no further life beyond death ,let us understand the life that we live,
here and now.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

(பலப் பல பிறவிகளில் உழன்று) மோட்சம் அடையும் தகுதியை ஒருவர் பெற்றுவிட்டதாக எண்ணினாலும், ஊழின் முடிவு அல்லாது, அவருக்கு அவர் கருதும் மோட்சம் கிடைக்காது.

வகுத்தான் வகுத்த வகை : ஊழ்

கோடி என்பது மோட்சத்தைக் குறிக்கும்.
தொகுத்தல் என்றால் படிப்படியாகச் சேர்த்தல்
கோடி தொகுத்தார் என்றால் (பலப் பல பிறவிகளில் உழன்று) மோட்சம் அடையும் தகுதியை ஒருவர் பெற்றுவிட்டதாக எண்ணுதல்.

ஊழ் என்ற கருத்து எதார்த்தமானது பிறவிப் பலன் (கர்மா) என்ற கருத்து கற்பனை ஆனது.

குறளின் முடிவு: இறப்புக்குப் பின் வாழ்க்கை இல்லை. இன்று வாழும் வாழ்க்கையைப் புரிந்து வாழ்வோம்.



Having denied the concept of the reincarnation of the soul with its past karma attached, now kuRaL gives an
easy way out to escape the difficulties of life.

If one wants to escape 'birth' the easy way out is given in the following:

மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345

For those who aspire to escape 'birth' why should there be any other linkage
(in the form of karma, sin,rebirth etc.) . This very body itself is an excess ( so one can straight
away dispose it off, kill oneself).


The solution given in the above verse is not against the Vedas.

மறுபிறவி, பிறவிப்பலன் என்பதை மறுத்த குறள் , வாழ்க்கையின் சோகங்களிலிருந்து மீள ஒரு எளிய வழியைக் கூறுகிறது.

மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345

பிறவித் தளையிலிருந்து மீள விரும்புவோருக்கு, கர்மா, மறுபிறவி, மோட்சம் என்ற கருத்துக்களைப் பற்றிய எண்ணங்கள் தேவையில்லை. அத்தகையோருக்கு இந்த உடலே அதிகப்படியானது, அழித்து விடலாமே.

தற்கொலை செய்யலாம் என்ற இக்குறளின் கருத்து ஆரிய வேதங்களுக்கு முரண்பாடானது இல்லை. பின் வரும் மகாபாரதக் கதை இதை விளக்கும்.



The story of the ashtavasus and the Mother river Ganga is an example. In the story, the vasus came to the Ganga and requested her to become their mother and to kill them at their birth so that they can escape the pains of human life and at the same time undergo the curse of the rishi.



பாரதக் கதையில் வரும் அஷ்டவசுக்களும் கங்கைத் தாயும் நம் மனதில் வருகின்றனர்.
முனிவரின் சாபம் பெற்ற அஷ்டவசுக்களும் கங்கைத்தாயிடம் வந்து தாங்கள் அவள் வயிற்றில் உதித்துப் பிறந்தவுடன் கங்கை நதியில்
வீசிக் கொன்று விடக் கேட்கிறார்கள். அதன் மூலம் ரிஷியின் சாபத்திற்கு எற்ப பூமியில் பிறந்து விடுகிறர்கள். பூமியில் வாழ்ந்து
இடும்பைப் படாது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். கங்கையும் இதற்கு உடந்தை.

The following verse is again displays the attitude of the Tamils towards the Vedic concept of Moksha:

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8 ( அழுகணிச் சித்தர் )


This body (life) is full of moss and dirt ; like the moist container of salt. I do not have a technique to change this mode of life . If only I have the means of obtaining a different life (of my choice) I might have left this sinful body to reach you, O Mother The technique of getting a good life after death is not available from those who talk of reincarnation of the soul and Moksha. That is what the Siddhar-poet decries. He is not assured of moksha after death like the ashtavasus


பின் வரும் பாடலும் ஆரிய வேதக் கருத்தான மோட்சம் பற்றிய திராவிடத் தமிழர் உணர்வை வெளிப் படுத்துகிறது.

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8 ( அழுகணிச் சித்தர் )

இந்தப் பாடலில், "மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!"
என்று சித்தர் புலம்புகிறார்.

பாவம் சித்தர். தற்கொலை செய்வதற்கு அவர் மனம் ஒப்பவில்லை போலும். அஷ்டவசுக்கள் போல் சித்தருக்கு இறந்த பின் மோட்சம்
உறுதி இல்லை அல்லவா.

7.நால்வர்ணம்/ Varna

The four Varnas

4.13. The fourfold caste has been created by Me according to the differentiation of Guna and
Karma; though I am the author thereof, know Me as the non-doer and immutable.[2,2a]

மக்களை நான்கு விதமாகக் குணங்களுக்குத் தக்கபடி பிரித்துப் படைத்திருக்கிறேன்.நான் நேரில் ஏதும் செய்வதில்லையாயினும்,
மாறாத நிலையிலிருப்பவனாயினும், அந்தப் பாகுபாடுகளை உண்டாக்கியவன் நானே என்று அறிவாய்.

The four-fold division of society is based on birth .If a person is of a particular caste
under the system all his descendents will be of the same caste. Brahmins are treated way superior
to others. For the same crime the punishment for the Brahmins is very light while it will attract
a severe punishment for a Sudra. These are enunciated by Manu in his book popularly known as Manu-Dharma .
Such a situation was not prevailing in the then Tamil-society. That is recorded by the Poet in the
following verses.

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972

All persons are born equal. The unwanted merit and superiority arises out of the differences
in their professions.



சமூகத்தின் நால்வகைப் பிரிவு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறையில், ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவரின்
வாரிசுகள் அதே சாதியாகக் கருதப் படுவர். பிராமணர்கள் மற்ற எல்லா சாதியினரை விடவும் மிக உயர்வாகக் கருதப் பட்டனர்.
ஒரே வகையான குற்றம் புரிந்த இருவரில் பிராமணருக்குச் சிறு தண்டனையும் பிரமாணர் அல்லாதவருக்கு, சூத்திரருக்கு, கடுமையான
தண்டனையும் தரப் படும். இது போன்ற சட்டங்களை மநு எழுதிய மநு தர்ம சாத்திரத்தில் காணலாம்.இது போன்ற ஒரு தவறு
தமிழ்ச் சமூகத்தில் காண முடியாது. இதைக் குறள் பின் வரும் குறட்பாவில் கூறுகிறது.

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் ஒவ்வாச் சிறப்பு செய்தொழில் வேற்றுமை யான் (தோன்றுகிறது).

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரே தன்மையதே. ஆயினும் செய்கின்ற தொழிலில் உள்ள வேறுபாடுகளால் ஏற்க முடியாத சிறப்பும் உயர்வும்
(சிலருக்கு) ஏற்படுகிறது.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )

As every profession is necessary for the welfare of the society, each of the work must be discharged
by somebody. Hence the work done by a person does not give any special status for that person.
This is further ascertained in the following verse:

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை. 37

The practice of aRam for the one in the palanquin is this way; and among the four bearers it is in
another way is not acceptable.


(The tenets of aRam is the same for both) .

The verse says that there is no difference between the rich and the poor or from the powerful and the weak when it comes to the application of the tenets of aRam. All are qual before aRam.

The tenets of aRam is common to all; the rich, the poor, thr powerful and the powerless commoner
This is in contrast to Manu-dharma which has different sets of code, for the same situation, for different castes.

ஒவ்வொருவர் செய்யும் தொழிலும் சமூகத்தின் நன்மைக்குத் தேவையானதுதான். ஒவ்வொறு வேலையையும் யாரேனும் ஒருவர் செய்தாக வேண்டும்.
அதனால் ஒருவர் செய்யும் வேலையோ,தொழிலோ அவருக்கு எந்த ஒரு தனிச் சிறப்பும் கொடுத்து விடாது. பின் வரும் குறள் இக்கருத்தை
விளக்குகிறது.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை. 37

அறத்தாறு சிவிகை பொறுத்தானொடு இது ஊர்ந்தான் இடை (இது) என வேண்டா. அறம் அனைவருக்கும் ஒன்றே.

அறவழி எழை, பணக்காரர், அதிகாரம் உள்ளவர், அதிகாரம் அற்ற பொது மக்கள் அனைவருக்கும் ஒன்றே ஆகும்.
மநு தர்மத்தில் சாதி அடிப்படையில் கூறப்படும் சட்டங்களுடன் குறட்பாவின் இந்தக் கருத்தையும் ஒப்பிடுக.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )

KuRaL is conscious of the proper interpretation of the above verses. Simply because all are
born equal one cannot disobey's superior at work. That will create indiscipline and chaos in the society.
So he conditions the above statements with the following.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 120

In business relationship be business like. Otherwise treat people as your kin.

In work place respect heirarchy and obey the rules , Outside of your work place treat and behave as
equals, as kin, with others.

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358

To overcome the delusion of superiority based on birth; one must understand the real meaning of
relative merit, among individuals. It is real knowledge.



திருவள்ளுவர் மேற்சொன்ன குறட்பா சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
அனைவரும் பிறப்பால் சமமானவர் என்ற காரணத்தால் ஒருவர் தன் கடமையைச் செய்யும் போது தன் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்குப்
பணியாமல் இருப்பது தவறு. அப்படிப் பணியாமல் இருப்பது சமூகத்தில் ஒழுங்கீனத்தையும் குழப்பத்தையும் வளர்க்கும். இது போன்ற
நிலையைத் தவிர்க்க குறள் கூறும் வழியை அடுத்து வரும் குறட்பாக்கள் விளக்குகிறது.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 120

தன்னிடம் வியாபாரம்,தொழில் நிமித்தமாக வருவோரிடம் தொழில் முறையில் பழகுங்கள். மற்றபடி அனைவரிடமும் நண்பர்,உறவினர் போல்
பழகுங்கள்.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358

பிறப்பினால் வரும் ஏற்றத் தாழ்வுகளைக் சமூகத்திலிருந்து களைய வேண்டுமானால் (மனிதரில்) சிறப்புப் பெற்றவர் என்பதற்கான
உண்மையான பொருளைப் புரிந்து கொள்வதுதான். இதுதான் உண்மையான அறிவு
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )

Having said that he mentions the persons who are really meritorious in the society:

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர் . 1033

The farmers growing food grains are the ones who live a real life and the rest are following them from behind praying their (farmer's) favour.


சிறப்பென்னும் செம்பொருள் காண வேண்டும் என்ற திருவள்ளுவர் உண்மையில் சிறப்புப் பெற்றவர் பற்றி விளக்கி பின்வரும் குறளில் கூறுகிறார்.

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர் . 1033

பயிர்த் தொழில் செய்து வாழ்வதே உயர்ந்த வாழ்வு ஆகும். பிற தொழில் செய்வோர் எல்லாம் அவரைப் பணிந்து பின் செல்ல வேணடும்.
குறள் பிறப்பின் அடிப்படையில் கூறப்படும் நால்வகை வர்ணங்கள் என்கிற கருத்தை ஏற்கவில்லை




8.குறளும் கீதையும்/ kuRaL and Gita


The Aryans were a migrating tribe from Central Asia into the Dravidian
land south of the Himalayas. On their way, they have learnt many things from
the people living along their path. The fury of nature in the form of fire,
rain, thunderbolt, storm were terrifying that they started considering them
as gods and started chanting hymns in their praise so that they can escape
their fury, and get their blessings in destroying their enemies, the local
people who resist their intrusion.


ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இமயமலைக்குத் தெற்கே இருந்த திராவிடர் பூமிக்கு
இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் வரும்போது வழியில் வாழ்ந்த உள்ளூர் மக்களிடமிருந்து
பல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு முன்னேறினர். தீ, மழை, இடி,புயல் ஆகிய இயற்கைச்
சீற்றங்களினால் பாதிக்கப் பட்ட ஆரியர்கள் அவற்றைக் கடவுளராகக் கருதி மேற்சொன்ன இயற்கைச்
சீற்றங்களைப் புகழ்ந்து பாடல்கள் புனைந்தனர்.( இப்பாடல்கள்தான் பின்னாளில் இருக்கு வேதம்
எனப் பெயர் பெற்றது).அதன் மூலம் அந்தக் கடவுளரின் ஆசியினால் இயற்கைச் சீற்றங்களில்
இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என எண்ணினர். தங்கள் குடியேறுவதை எதிர்த்த உள்ளூர்
மக்களை வெல்லவும் அவர்கள் வேண்டுதல் உதவும் எனவும் நம்பினர்.


The second stage of the vedas have verses to be chanted during
rituals and (animal) sacrifices. This stage shows that the Aryans were
settled and have gained the confidence of the local people. The rituals
and sacrifices were conducted for the welfare of the persons who institute
the rituals. Initially the people believed that the rituals were capable of
bestowing wealth and happiness to the devotees. Over a period of time the
hollowness of the mantras chanted at the rituals and the animal sacrifices
were felt by the masses. There were resentment and disbelief.


யாகங்கள், அதற்கான மிருகக் காவு, மத நம்பிக்கையை ஒட்டிய சடங்குகள் அகியவற்றில்
ஓதுவதற்கான மந்திரங்கள் வேதங்களின் வளர்ச்சியின் அடுத்த நிலை ஆகும். இந்த நிலையில்
ஆரியர்கள், அங்கு நிலைத்து, உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருக்க வேண்டும்.
இந்தச் சடங்குகள் விரும்பிய மக்களுக்காக, அவர்கள் செலவில், செய்யப் பட்டன. தாங்கள்
விரும்பிய செல்வம், மகிழ்ச்சி ஆகியன இந்த சடங்குகளால் நிறைவேறும் என மக்கள் நம்பினர்.
காலப்போக்கில் இந்தச் சடங்குகளின் நம்பகத்தன்மை மக்களிடையே குறையத் தொடங்கின.
ஏமாற்றமும், சந்தேகங்களும் மக்களிடையே பெருகின.


At this point Buddhism and Jainism , which preached against the rituals
and animal sacrifices started getting popular support.

Belief in the Vedic religion was declining. Aryans were at a compulsion
to retrieve the losing faith of the masses. There was a need to give a new
approach to the meaning of human life and existence. Animal sacrifices and
meaningless rituals must not be emphasized in the new dispensation. During
this period they have already penetrated into the peninsular india. Buddhism
and Jainism were spreading in Tamil land.

இந்தக் காலத்தில் புத்த சைன மதங்கள் தோன்றி மதச் சடங்குகள், மிருகக் காவு ஆகியவற்றை
எதிர்த்தனர். மக்களிடையே இந்த மதங்களுக்கு ஆகரவு பெருகியது.

வேத மதத்தின் மீதான நம்பிக்கை மக்களிடையே குறையத் தொடங்கின. மக்களின்
நம்பிக்கையை மறுபடி மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆரியர்கள் தல்ளப் பட்டனர்.
வாழ்க்கை அதன் பொருள் பற்றிய கருத்துக்களை சடங்குகள்,மிருகக் காவு போன்றவை
இல்லாத வகையில் மாற்றிச் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தக் கால அளவில்
ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி விட்டு இருந்தனர். புத்த, சைன மதங்கள் தமிழகத்தில்
பரவி இருந்தன.


The Tamils were already having a structured society and rules governing
their social and personal behavior. They have their own philosophy of life
spreading over many centuries earlier than kural. KuRaL records all of Tamil culture
prevailing at that time. Tamil culture and their philosophy could have inspired
the Aryans to write the Upanishads and stay afloat against the onslaught Buddhism
and Jainism. The Upanishads are the last part of the Vedas. They were of a
later origin.

Bhagavat-Gita is an epitome of Upanishads. In the following discussion
we try to bring out the resemblance of both Gita and kuRaL. We see how the
philosophy of kuRaL is converted into a philosophy, as we have it today in the
form of the Gita.

தமிழ்ச் சமூகம் (குடும்பம்,பெற்றோர்,மக்கள்,உறவினர்,தன்புலத்தார் (இணையாக இருப்போர்) என்று பல நிலைகளை
வகுத்து நெறிப்படுத்திய மக்களைத் தன்னகத்தே கொண்டது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிலையிலும், சமூக அளவிலும்,கடைப்பிடிக்க
வேண்டிய முறைகளைக் கொண்டது தமிழ்ச் சமூகம். குறள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே வளர்நத நாகரிகம்
கொணடது. குறள் அத்தகைய நாகரிகத்தையும்,தமிழர்கள் கடைப்பிடித்த தத்துவ நெறிகளையும் தொகுத்து அளிக்கிறது.புத்த,சைன
மதங்களின் தாக்கத்திலிருநது மீள ஆரியர்கள் தொகுத்த உபநிடதக் கருத்துக்களுக்கு, தமிழர் நாகரிகமும், தத்துவமும் முன்னோடியாக,
வழிகாட்டியாக அமைந்தன. ஆரிய வேதத்தின் கடைசிப் பகுதிதான் உபநிடதங்கள். புத்த, சைன மதங்கள் மக்களிடையே பரவிய
பின்னர்தான் உபநிடதங்கள் தோன்றி இருக்க முடியும்.

கீதை உபநிடதங்களின் சுருக்கமாகும். இதற்குப் பின் வரும் பகுதிகளில் கீதைக்கும், குறளுக்கும் இடையேயான ஒற்றுமைகளைக் காண்போம்.
கீதையில், எப்படி குறளில் காணப்படும் கருத்துக்கள், ஆரிய வேதத்திற்கு ஒப்ப மாற்றப் பட்டது என்பதையும் காண்போம்.

9.விசுவரூபதரிசனம்


Instead of giving the Gods a place of primacy , kuRaL puts the society as a primary
commitment and a guide of individuals. This is reflected in the common sayings prevailing among
the Tamils even to this day:

கடவுளருக்கு முதல் இடம் கொடுக்காது, மனிதருக்குச் சமூகமே முதல் வழிகாட்டியாகவும், கடமையாகவும் குறள் கூறுகிறது.
இது தமிழகத்தில் வழக்கமாகப் பேசப்படும் சொலவடையில் புரியும்.

பரமசிவன் வாக்கிலும் பத்துப் பேர் வாக்கு மேல்.

The social or public acceptance is much more valuable than the acceptance of Brahman,
the Siva.


Peace and happiness is what everyone aspires for in their everyday life. Living in a society with
different types of people with varying aspirations , one can get the required peace and happiness only
to the extent the society surrounding them allows.

In a society of criminals no peace is possible for anyone. So The starting point for the
individual happiness lies in the society. Dravidians understood this very well that they gave the primacy
of place to the society, which is reflected in the verses of kuRaL. For a peaceful and tranquil society
everyone must make a contribution to it. kuRaL delineates the code of conduct of individuals in the society
to that and. A study of its advice to individuals in various verses under different heads will amply
demonstrate this attitude and expectation of kuRaL. That is what we have chosen to call
Philosophy of Peninsular India – aRam.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் விரும்புவது அமைதியும், மகிழ்ச்சியுமே. பல தரப்பட்ட வெவ்வேறு
எதிர்பார்ப்புக்களுடன் வாழும் மனிதர்கள் உள்ள இந்தச் சமூகத்தில்,ஒருவர் தேடும் அமைதியும் மகிழ்வும் அவர்களைச் சுற்றியுள்ள
சமூகத்தைப் பொருத்தே அமையும்.

குற்றவாளிகள் நிறைந்த சமூகத்தில் எவரும் நிம்மதியாக இருப்பது இயலாது. தனி மனிதனின் அமைதியும் மகிழ்வும்
அவனைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பொறுத்தே அமைகிறது. இதை நன்கு உணர்ந்த திராவிடத் தமிழர்கள், தங்கள் வாழ்வில்
சமூகத்திறகே முதலிடம் தந்து இருந்தனர். இது குறட்பாக்களில் தெளிவாகக் காணப்படும். அமைதியான, குழப்பமற்ற சமூகம்
அமைவது ஒவ்வொரு மனிதரின் பங்களிப்பில் இருக்கிறது. குறட்பாக்கள் சமூக வளர்ச்சிக்கான தனி மனிதரின் பங்களிப்பை
விளக்குகிறது. பல தலைப்புக்களில் உள்ள குறட்பாக்கள் தனி மனிதரிடம் அதன் எதிர்பார்ப்பையும், அறிவுரையையும் தெள்ளிதின்
விளக்கும். இதையே நாம்

தமிழனின் தத்துவம்-திருக்குறள்_அறம்

என்கிறோம்.

We give a very short outline of that philosophy in the following:

According to KuRal social acceptance, renown, reputation, fame and glory (புகழ்) is the ultimate purpose of life ([1] 221, 231. 233, 236).

To give the poor is charity, all other acts of giving will be just in anticipation of rewards and
returns - 221

Give to the poor and add glory unto thy name: there is no greater profit for life than
this. - 231

Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver! - 233

Everyone must have qualities that are appreciated by the society and give a renown and reputation
for the person. That is the purpose of this very birth. If one cannot live such a life, their very birth
is a waste. The society might have been better off without them - 236


தமிழனின் தத்துவம் பற்றிய சிறு விளக்கத்தை பார்ப்போம்:

வாழ்க்கையின் குறிக்கோள் சான்றாண்மை, புகழ் இரண்டுமே. இவற்றை அடைவதற்கான வழிகளைக் குறளின் பெரும் பகுதி
விளக்குகிறது. குறிப்பாக கீழ்க்கண்ட குறட்பாக்கள் சுருக்கமாக விளக்கும்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. 221

ஈதல்இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். 233

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 236


This view is reflected in the verses of Gita:[2,2a]

3.21. Whatsoever a great man does, that other men also do; whatever he sets up as the standard, that
the world follows.

பெரியவர்கள் எந்த வழியில் செல்கிறார்களோ அதையே மற்றவர்கள் பின்பற்றுவார்கள். பெரியவர்களுடைய செயல்களைக் கொண்டு உலகம்
நன்மை எது தீமை எது என்று அறிந்து நடக்கும்.

2.34. People, too, will recount thy everlasting dishonor; and to one who has been honored, dishonor
is worse than death.

2.34. உலகம் உன் பேரில் தீராத பழி பேசும். அது புகழைச் சம்பாதித்த வீரனுக்கு மரணத்தை விட அதிகத் துன்பமாகும்
நீ இந்த நியாயமான போரில் கலந்து கொள்ளாமல் போனாயானால், உன் குல தர்மத்தையும், உன் கீர்த்தியையும் அழித்துப்
பாவம் அடைந்தவனாவாய். அது மட்டுமல்ல உலகம் உன் பேரில் தீராத பழி பேசும். அது புகழைச் சம்பாதித்த வீரனுக்கு
மரணத்தை விட அதிகத் துன்பமாகும்.


KuRal elaborates as to how fame and glory gives happiness and peace to the individual.
Helping the poor and needy will make people happier. The more the poor and needy the more
turbulent will the society be.Thus the welfare deeds improves the peace and tranquility
in the society. This in turn gives fame and glory to the individual. With such a glory the society
remembers the person even after his death. His name, in a way, ' merges' , with the social fabric.
His name becomes eternal. The society also gets enriched by such people and their activities.

புகழ் ஒருவருக்கு எவ்வாறு மகிழ்வும் நிம்மதியும் அளிக்கிறது என்பதைக் குறள் விரிவாகவே விளக்குகிறது.
வறியவருக்குச் செய்யும் உதவி அவர்களை மகிழ்விக்கும். வறுமையும் பற்றாக்குறையும் அதிகமாக உள்ள சமூகத்தில்
அதிகப்படியான குழப்பம் நிலவும். ஆக வறியவருக்கு உதவுவதால் சமூகத்தில் அமைதியும், நிம்மதியும் கூடும்.
இதனால், உதவி செய்பவருக்குப் பெயரும் புகழும் சேரும். அவர் மரணத்திற்குப் பின்னும் அவரைத் சமூகம்
மறவாது போற்றும். அவர் பெயர் மக்களின் மனதில் அழியாத இடம் பெறும். இது போன்ற சான்றோர்களின்
செயல்களால் சமூகமும் வளம் பெறும்.



A quote from Brihdaranyaka Upanishad will be appropriate in this context.([3] 3.2.12.)

“ 'Yagnaavalkya,' said he, 'when this man dies, what is it that does not leave him?'
'Name. The name indeed is infinite, ......... “

The society is without a beginning . Nobody can say when the social living of humans started. So also
we do not know when will it end. It is all pervading in the world. It has good and bad persons. Thus the
society assimilates within itself all such pairs of opposites.

Now let us take and impute these properties to an abstract entity. We get the notion of Brahman of
the Upanishads. To substantiate our claim we quote below from [2] ,with modification to suit our purpose,
the attributes of Brahman / society.


பிருகதாரன்ய உபநிடதத்தில் இருந்து கீழ்க் கண்ட மேற்கோள் இப்போது பொருத்தமானதாக அமையும்:
"யக்ஞவாக்யரே 'மனிதன் இறக்கும் போது அவனை விட்டு நீங்காதது எது' எனக் கேட்டான். 'பெயர். (ஒருவனுக்குப)
பெயர்தான் அளவில் அடங்காதது.....'"


சமூகம் தோன்றியது எப்போது?, அதன் முடிவு எப்போது? என்பன யாருக்கும் தெரியாது. சமூகம் எங்கும் பரவி இருப்பது.
அதில் நல்லவர்களும், தீயவர்களும் கலந்து இருக்கிறார்கள். சமூகம் தன்னுள் பல எதிர்மறையானவற்றை அடக்கி உள்ளது.

மேற்சொன்ன குணங்களைக் கொண்ட ஒரு கற்பனையான கருத்தை நாம் உருவாக்குவோம். இந்த முறையில் ஏற்பட்ட
கருத்து, உபநிடதத்தில் கூறப்பட்ட பிரம்மனை ஒத்து இருக்கும். இதற்குச் சாதகமாக கீதையிலிருந்து சில மேற்கோள்
( விளக்கத்திற்காக சில சிறு திருத்தங்களுடன்) அடுத்து காட்டுவோம்.


10. 3. He who knows Brahman / society as unborn and beginningless, .......

10. 3.லோக மகேஸ்வரனாகிய என்னைப் பிறப்பும் மூலமும் இல்லாதவன் என்று ............

13.13. hands and feet everywhere, with eyes, heads and mouths everywhere, with
ears everywhere, Brahman / society exists in the worlds, enveloping all.

13.13. பிரம்மத்தின் கைகளும் கால்களும் எங்கும் அளாவி நிற்கும். பிரம்மத்தின் கண்ணும் செவியும் வாயும் முகமும் எங்கும்
தொழிற் பட்டு நிற்கும். பிரம்மம் உலகெங்கும் எதையும் வியாபித்து நிற்கும் பொருள்.

13.14. Brahman / society is unattached, yet supporting all ; devoid of qualities,
yet their experiencer,

13.14. பிரம்மன் எதையும் ஒட்டாமல் யாவற்றையும் தாங்கி நிற்கும்.குணமற்றது ஆயினும் சர்வ குணங்களையும் துய்க்கும்.


13.15. Without and within (all) beings, the unmoving and also the moving;

..பொருள்களுக்குப் புறம்பாக நிற்கும், எனினும் பொருள்கள் அனைத்தின் உள்ளும் நிற்கும்.அது அசையாப் பொருள்.
அசையும் பொருளும் அதுவே.....

13.23 Brahman / society is the spectator, the permitter, the supporter, the enjoyer, of
individuals and their activities.

பிரம்மன்.. சாட்சி என்றும்,சம்மதிப்பவன் என்றும் தாங்குபவன் என்றும் அனுபவிப்பவன் என்றும்.....

13.28 Brahman / society is existing equally in all beings, the unperishing within
the perishing.

அழியும் உடலில் அழியாமல்...அனைத்துயிரிலும் சமத் தன்மை கொண்டு...

13.31 whole variety of beings rests in the Brahman / society, and spreading forth from
That alone,

அவ்வாறு அனைத்துயிரிலும் ஒரு தன்மையாக ஆன்மா நிறபதை..........


13.32. Being without beginning and devoid of (any) qualities, the Brahman / society is
imperishable,

ஆன்மாவிறகுப் பிறப்பில்லை, அதற்கென்று குணங்களும் இல்லை...அது மாறுபடாக பொருள்

15.7 An eternal portion of Brahman / society sustains the world of life,

பரம்பொருளாகிய என்னிலிருந்து ஓர் அம்சம் சீவனாகத் தோற்றம் கொள்கிறது.

15.15. Brahman / society is seated in the hearts of all; from Brahman / society arises
memory, knowledge, as well as their absence.

அனைத்துயிரின் இதயங்களிலும் நான் இருக்கிறேன். நினைவு, அறிவு இவை இருப்பதும் போவதும் என்னால் உண்டாவதே.


So what is Brahman to Gita is Society to kuRaL. Gita explains the means of individual
advancement and the teachings of kuRaL is meant for social welfare.

Gita tells 'Reach Brahman'. kuRaL tells 'reach the society', the poor and the needy”.

In this context, the following verse explains the importance Dravidians gave to social
welfare. It is a practical and easy way of improving the social-climate for the better where every
individual has a role and responsibility.

The verse :

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. 68


To have one's offspring more knowledgeable and intelligent than oneself is beneficial
to the society at large.



கீதைக்குப் பிரம்மன் எப்படியோ , அதுபோல் குறளுக்குச் சமூகம் என்றாகிறது. கீதை தனி மனிதன்
மோட்சம் அடையும் வழியைக் கூறுகிறது.குறளோ சமுக வளர்ச்சியைப் பற்றிக் கூறுகிறது.

கீதை அழியாத மோட்சம் அடைவாய் என்கிறது. குறள் வறியோருக்கும், உதவி தேவைப்பட்டோருக்கும்
உதவி செய்து, சமூகத்தில் அழியாப் புகழ் அடைவாய் என்கிறது.

இந்த சமயத்தில், பின்கண்ட குறட்பா அந்தக் காலத் தமிழர்கள் சமூக மேம்பாட்டிறகு முன்னுரிமை அளித்ததை
விளககும். சமூக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தனி மனிதரின் பங்களிப்பு, பொறுப்புப் பற்றியும், அதன் மூலம்
சமுக வளர்ச்சிக்கு நடைமுறைக்கு ஏற்ற வழியையும் காட்டுகிறது.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. 68

தம் மக்களின் அறிவுடைமை , தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம்
மிகுந்த இன்பம் பயப்பதாகும(மு.வ)

வேறு உரை:
தம்மின் means தம்மைவிடவும் (தம்மினும்)
தம் மக்கள்
அறிவுடைமை
மாநிலத்து
மன்னுயிர்க்கு
எல்லாம் இனிது.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )


Here the poet advices the parents to train their children intellectually superior
and more knowledgeable than themselves. It will enhance the quality of the society, as
generations pass-by. The positive attitude of the poem reflects the social consciousness
of the Tamil society.

This idea is further reinforced in :

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும். 114

The worthy and the unworthy are known by their offspring.

This is about the contribution of parents towards the society they live in.


தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்களை விடவும் அறிவுள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்று
குறள் அறிவுறுத்துகிறது. இதனால் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளில் சமூகம் முன்னேறும்.நம்பிக்கையுடன் கூறப்பட்ட
இந்தக் கருத்து தமிழ் மக்களின் சமூக அக்கறையைக் குறிக்கிறது. இந்தக் கருத்து, பின் கண்ட குறட்பா மூலம்
மேலும் வலுப் பெறுகிறது.

தக்கார் தகவிலர் என்து அவரவர்
எச்சத்தால் காணப் படும். 114

ஒருவரின் தகுதியும் தகுதியற்ற தன்மையும் அவர்களின் பிள்ளைகளின் தன்மையால் விளங்கும்.
இது பெற்றோர் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமையை விளக்குகிறது.



Now the poet turns to the younger generation, the children. He says that they have
also got a role to play in determining the nature of the society they live in. The following
verse discusses this point.


மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.134


Following the path that is different from aRam may be accepted (tolerated),
it being a matter of conviction. But as a son of the family one cannot stray away from family
discipline and commitments.


Comment: Here the youngsters must at least follow the family norms so that there is
status quo both in the family and the society at large.

Note: The word பார்ப்பு means the chick (அஃறிணை)
. So the word பார்ப்பான் (உயர்திணை) should mean the son,
பாப்பாள் ,
the daughter in the family.

அடுத்து குறள் இளைய தலைமுறையை,பிள்ளைகளை, நோக்கித் திரும்புகிறது. பிள்ளைகளுக்கும் சமூகக்
கடமை உண்டு ,அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதைப் பின்வரும் குறள் விளக்குகிறது,

மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.134

(அறவழி) மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

குடும்பத்தின் இளையோர் அறவழி தவறி நடப்பதை ஏற்றுக் கொண்டாலும்,குடும்பத்தில் பின்பற்றப்படும்
ஒழுக்க நெறிகளை மறப்பதை ஏற்பது முடியாது. அது அழிவைத் தரும்.
( குறளுக்கான விளக்கம் வழக்கமான உரையினின்று மாறுபட்டது. )

பார்ப்பு (அஃறிணை)என்றால் பறவைக் குஞ்சு, வளர்ச்சி பெறாதது. பார்ப்பான் (உயர்திணை, ஆண்பால்) என்றால்
மகன், வளர்ச்சி பெறாதவன், சிறுவன். பார்ப்பாள் (உயர்திணை, பெண்பால்) என்றால் மகள், வளர்ச்சி பெறாதவள்,சிறுமி.

இளையோர் குடும்ப வழக்கங்களை மீறும் போது, அடுத்த தலைமுறைச் சமூகம் தரம் தாழும்.
அடுத்த தலைமுறை அறிவில் முன்னேறியவர்களாக இருப்பது நல்லது. அப்படி அமையாத போது,
பெற்றோர்களை விட அறிவில் குறைந்தவர்களாகி விடாமலாவது இருப்பது நல்லது.


Thus ,kuRaL ordains the parents to train their children to have better knowledge
and understanding than themselves , as social commitment.

He also exhorts the younger generation to follow the family norms, at the minimum;
so that th status quo is assured in the family and the society at large. This concept
is possible since the society discussed is real and dynamic. In this process there is a role
for individuals towards making a positive change in the social order. Thus the society and
the individual are inter-related .

பெற்றோர் நல்ல முறையில் தங்கள் பிள்ளைகளை வளர்த்து, தங்களை விட அறிவாளிகளாய், ஆளாக்குவது
ஒரு சமூகக் கடமையாகும் என்று குறள் கூறுகிறது.

இளைஞர்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்ப பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம் அடுத்த
தலைமுறை தரம் தாழ்வது தவிர்க்கப் படுகிறது. இது போன்ற அறிவுரைகள் நடைமுறைச் சாத்தியமே. ஏன் எனில்
சமூகம் உண்மையாக உள்ளது, மாறுதல்களை ஏற்பது. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தச் சமூக வளர்ச்சியில்
பங்களிப்பு உண்டு. தனிமனிதனும் சமூகமும் ஒன்றுக்கொன்று பொறுப்பானதாக ஆகிறது.

Gita does not discuss the welfare of the society at large since it believes in the varna
concept of Manu . The brahmins were given primacy in the society and all the rest of the
community ,in some way or the other, support the brahmins to have a comfortable life at their
expense .

The above verse 114 clearly distinguishes Dravidian thinking from the Aryan.

We elaborate on the question of Brahman and the Society discussed above. The parallel
between Brahman of Gita and Society as given in kuRaL is seen in the eleventh chapter of
Gita, Viswaroopa Darsan.


கீதை பொதுமக்களின்,நன்மை, உயர்வு பற்றி விவாதிக்கவில்லை. காரணம், கீதை ( வர்ணாசிரமம் என்ற)
நால்வகை சாதி முறையை ஆதரிக்கிறது. மற்ற சாதி மக்களை விட பிராமணர்களுக்குச் சமூகத்தில் மேன்மையான
மரியாதை, பெருமை கொடுப்பது இந்தச் சாதி அமைப்பு. பிற சமூகத்தவர், பிராமணர் வசதியான வாழ்க்கை
வாழச் சேவை செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிட்ட குறள் எண் 68 திராவிடர்களின் சிந்தனை எப்படி ஆரிய சிந்தனையினின்றும் மாறுபட்டது
என்பதைக் கூறுகிறது.

சமூகம், மோட்சம் என்ற பிரம்மன் ஆகிய கருத்துக்களை மேலும் விரிவாகக் காண்போம். கீதையின்
பதினொன்றாவது அத்தியாயம், விஸ்வரூப தரிசனம். அதில் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்,
மோட்சம் (பிரம்மன்) , குறள் கூறும் சமூகம் இவையிடையேயான கருத்து ஒற்றுமை பற்றி பார்ப்போம்.


During the dialogue with Arjuna, the Lord tells him that he will show him his true
form which is not known to any but a few. Here Arjuna is chosen as a deserving devotee to
have a darshan of the the true form of the Lord.

Arjuna sees within the Lord all of the world , all the animate and inaimate objects of
the world and all human beings who lived in the past, present and the future . He saw the Lord
crushes them with his teeth, signifying the dying generations and those new ones further proceeding

அர்ச்சுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் நடந்த உரையாடலின்போது, பகவான், அர்ச்சுனனுக்கு, ஒரு சிலராலேயே
பார்க்கப்பட்ட, தன் உண்மையான உருவத்தை காட்டுவதாகச் சொன்னார். அவர் விரும்பிய, தகுதி வாய்ந்த பக்தர்
களால் மட்டுமே பார்க்கப் பட்ட அந்த உருவம், உண்மையான பக்தனாகிய அர்ச்சுனனுக்கு காட்டப் படுகிறது.

அனைத்து உலகங்களும், உலகிலுள்ள உயிருள்ள,உயிரற்ற அனைத்துப் பொருட்களும், மனிதர்களும்,
வாழ்ந்து மறைந்த, இப்போது வாழ்கின்ற, இனிமேல் தோன்றக்கூடியவைகளுமான அனைத்தையும் அர்ச்சுனன்
பகவானிடம் கண்டான். பகவான் அவைகளை பற்களால் நசுக்கி அழிப்பதைக் கண்டான்.மறைந்த,மறைகின்ற,இனி
மறையப் போகும் அனைத்தையும் குறிப்பனவாக அவை தோன்றின


11.7 .Whatever you wish to see can be seen all at once in this body. This universal form
can show you all that you now desire, as well as whatever you may desire in the future. Everything
is here completely.

அர்ச்சுனா!இப்பொழுது பார்ப்பாய்.பிரபஞ்சத்தில் நீ அறிந்த அசையும் பொருளும், அசையாப் பொருளும் மேலும் நீ பார்க்க
விரும்பும் அனைத்துமே ஒருமித்து நானாகக் காண்பாய்.

11.15. Arjuna said: My dear Lord Krsna, I see assembled together in Your body all the
demigods and various other living entities. I see Brahma sitting on the lotus flower as well as Lord
Siva and many sages and divine serpents.

தேவனே! உன் உடலில் உலகம் அனைத்தையும் கண்டேன்.தேவர்கள்,உயிரினங்கள் அனைத்தும், கமலாசன இறைவனான பிரம்மனும்,
எல்லா ரிஷிகளும் சர்ப்ப தெய்வங்களும் உன்னில் அடங்கக் கண்டேன்.

11.29. I see all people rushing with full speed into Your mouths as moths dash into a
blazing fire.

ஈசல் பூச்சிகள் எரியும் தீயில் சாவதற்கு வேகமாய் சென்று விழுவதைப்போல் மக்கள் உன்னுடைய வாய்களுள் நுழைகின்றனர்.

Thus the whole world of living and non-living as well as those who lived in the past and
to be born in the future are personfied in the form the Lord, which is exposed to Arjuna by his
Viswaroopa.


உலகில் தோன்றிய, உள்ள, இனி தோன்றக் கூடிய உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் பகவான் வடிவில் விஸ்வரூபமாக
உருவகப்படுத்தப் பட்டு உள்ளது. இதுதான் விஸ்வரூபத்தின் தத்துவம்.

7.26. I know, O Arjuna, the beings of the past, the present and the future, but no one
knows Me.

கழிந்ததும், நிகழ்வதும் வருவதும் அனைத்தும் நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்.

9.8. Animating My Nature, I again and again send forth all this multitude of beings,
helpless by the force of Nature

எனக்கு அடங்கிய இயறகையின் மூலம் உயிர்கள் அனைத்தையும் திரும்பத் திரும்பப் படைக்கிறேன்.அவை சதந்திரமின்றி
முற்றிலும் இயறகையின் வசமாகி நிற்கின்றன.

Thus the concept of Brahman was deduced from the notion of the society, society personified.

In Vedic approach , as we have seen, the society is personified as Brahman. Adapting the above
Dravidian approach can one attempt at 'improving' the Brahman ? Brahman has been defined as the
ultimate and not changing with any event. As such it is a static concept. Thus we can improve the
qualities of the society but not that of the Brahman, which is not affected by any external influences.

In kuRaL we have
1. the individual,
2. the society and
3. their relationship wherein individual has scope to improve the society, with every new
generation coming up.
4. The ultimate aim of life is to attain fame and reputation, so that the name is remembered by
the society even after the death of the individual, in other words the individual must reach
the society.

சமூகத்தின் உருவகமாக பகவான் உள்ளதாகப் பார்த்தோம். இது ஆரிய வேத மரபு. திருக்குறளில் சமூகத்தின் தரத்தை காலப்போக்கில்
மக்களின் ஈடுபாட்டுடன் உயர்த்தலாம் என்று கூறப்பட்டது போல் பிரம்மனை மேலும் மேலும் திருத்த வாய்ப்பு இருக்கிறதா? பிரம்மன் முடிவானதாக,மாறாததாகக் கற்பிக்கப் பட்டுள்ளது. பிரம்மன் மாற்றி அமைக்க முடியாத ஒரு கற்பனை. நம்மால் காலப்போக்கில் சமூகத்தின்
தரத்தை மாற்றி உயர்த்த முடியும். பிரம்மன் எந்த நிலையிலும் மாறாத, மாற்ற முடியாத ஒரு கருத்து, கற்பனை.

குறளில் காணப்படுபவை:
1. தனிமனிதர்
2. அவர் வாழும் சமூகம்
3. அவருக்கும் சமூகத்துக்குமான தொடர்பு. அடுத்தடுத்த தலைமுறைகளில் சமூகத்தின் தரம் உயர்வதற்கான வாய்ப்பு
4. வாழ்க்கையின் குறிக்கோள் வறியோர்க்கு ஈந்து அதன் மூலம் இறந்த பின்னும் அழியாப் புகழ் அடைவது ஆகும்
அதாவது, "சமூகத்தைச் சென்று அடைவாய்"


In the Gita
1. The individual is there.
2. The society is converted into an the abstract and all powerful Brahman.

But the relation of the individual and Brahman cannot be enunciated directly as in
kuRaL since Brahman is a static, abstract entity and the individual is real. The individual is
not capable of any contribution towards the improvement of Brahman. So the individual is made
to improve himself to 'reach the Brahman'. In such an improvement one must adhere to the vedic faiths.

கீதையில்:
1. தனி மனிதன் உண்டு.
2. சமூகமானது எல்லாம் வல்ல கற்பனையான பிரம்மனாக மாற்றப்பட்டு உள்ளது.

ஆனால் தனி மனிதனுக்கு பிரம்மனுடனான தொடர்பு, குறளைப் போல் நேரிடையாகச் சொல்வது இயலாது.
ஏனெனில் பிரம்மன் மாறாதது, கற்பனையானது, அதே சமயம் மனிதன் உண்மையாக இருப்பவர். தனி மனிதர்
பிரம்மனைச் உயர்த்த இயலாத நிலையில் உள்ளதால் , தனி மனிதர் பிரம்மனை அடைய தன்னைத் தானே உயர்த்திக்
கொள்ள வேண்டும் என கீதையில் மாற்றப் பட்டுள்ளது. அதற்காக தனி மனிதர் ஒவ்வொருவரும் ஆரிய வேத மரபுப்
படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

The improvement of the society. in kuRaL, occurs with passing generations.

So correspondingly, in Gita, the improvement of individuals happens with multiple births. As
the individual cannot take rebirths, the life in the person , soul, is made to be born repeatedly
with newer bodies depending upon the merits of the past births.

In kuRaL the society is improved by the motivated parents through their offsprings.

In Gita, the Karma theory motivating the person to improve.

குறளின் கருத்துப்படி , சமுகம் அடுத்தடுத்த தலைமுறைகளில் முன்னேறும் வழிமுறைகளைக் கூறுகிறது.

அதுபோல், கீதையில், தனி மனித முன்னேற்றம் பல பிறவிகளுக்குப் பின் அமைகிறது. மனிதன் மறுபடி நேரடியாகப்
பிறந்து உயர்வது இயலாது. அதனால், தனி மனிதனின் உயிர், ஆத்மா என்து பெயரிடப் பட்டு, பல பிறவி எடுப்பதாக கீதை
கூறுகிறது.(மறுபிறவி என்ற கருத்து தோன்றிய வழி இதுதான்) ஆத்மா மறுபடி மறுபடி புதுப் புது உடலில் , முற்பிறவியின் செயல்களுக்கேற்ப, பிறவி எடுக்கிறது.

குறளின் கூற்றுப்படி, நல்வழி காட்டும் பெற்றோர்களால், அடுத்தடுத்த தலைமுறைகளில் சமூகம் உயர்கிறது.

கீதையின் கருத்துப் படி முன்வினைப் பயன் என்கிற அடிப்படையில், (இப்படித்தான் ஆத்மா, கர்மா அல்லது
மறுபிறவிப் பயன் தோன்றியது) ஆத்மா முன்னேறுகிறது.


Having given a new direction to their philosophy inspired by Dravidian thinking, there
are some loose ends to tie. Brahman is successfully linked to the individual soul. But the real
society which gave the concept of Brahman is left out. That is settled by taking the real society
as a projection of the 'bigger, abstract' Brahman. This abstract Brahman is the nirguna Brahman and
the real society is the saguna Brahman.

திராவிடத் தமிழர்களின் தருத்துக்களால் உந்தப்பட்ட ஆரியர்கள், அதன் அடிப்படையில், தங்களுக்குப் புதிய
தத்துவத்தை நிறுவியதை இதுவரை விவரித்தோம். இன்னும் சில விடுபட்ட கருத்துக்களைச் சேர்த்து தங்களின்
புதுக் கொள்கையை முழுமையாக்கினர். பிரம்மனை முன்னிலைப் படுத்தி மேற்கண்ட விளக்கம் அமைகிறது.
பிரம்மன் என்பது சமூகம் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது. சமூகத்தை ஆரியத் தத்துவம்
சகுண பிரம்மன் எனவும் அதனடிப்படையில் உருவாக்கப் பட்ட பிரம்மனை நிர்குண பிரம்மன் எனவும் பெயரிட்டனர்.


Thus the comparison of the two great works explains that the two concepts are the same. But
in the case of the Vedic theory we have a lot of roles for priests to exploit. Rituals to escape
rebirth, quashing sins of previous birth etc . are the for the priests, astrologers, nadi-readers
to exploit. The individual is not independent to act but driven by his karma.

இரண்டு நூல்களையும் ஒப்பிட்டதில் இரண்டு நூல்களுமே ஒரு கருத்தையே பேசுகின்றன. கீதை வேதக்
கருத்துக்களை ஒட்டி சில கற்பனைகளைப் புனைந்து ,சொல்லப்படும் கருத்துக்களை நேரிடையாகச் சொல்லவில்லை. அதனால்
புரோகிதர்கள் இலாபம் அடைகின்றனர்.மோட்சம் பெறவதற்கான, முற்பிறப்பின்
பாவங்கள் விலகுவதற்கான பல வித சடங்குகளுக்கு புரோகிதர்கள்,நாடி சோதிடர்,சோதிடர் எனப் பலர் இலாபம்
பெறுவதற்கு வழி வகுக்கிறது. மனிதன் சுதந்திரமாக இயங்கவில்லை. முற்பிறவியின் பாவ புண்ணியங்கள்
மனிதனை இயக்குகிறது.

In the Dravidian theory, we get a peace loving, dynamic society with each individual contributing
to its refinement. There is no room for exploiting in the name of the Dravidian philosophy. The
present actions of the individual counts.

We proceed to see further parallels between the two works.

திராவிடத் தமிழரின் திருக்குறளில் ஒரு அமைதியான, வளரும் சமூகமும் அதன் வளர்ச்சிக்கு
உதவும் மனிதர்களும் கூறப்படுகிறது. மனிதனின் செயல்பாடுகளே அவன் நிலையைத் தீர்மானிக்கிறது.
மனிதனைச் சுரண்டும் தந்திரங்கள் எடுபடாது.



10.கர்ம, ஞான, பக்தி யோகம்/ three yogas.

The different paths of attaining Brahman is given in Gita as Karma-yoga, njaana-yoga and bakthi-yoga.

Njaana yoga is based on knowledge. Here the individual understands the abstract nature
of the Brahman. In all his works he keeps himself away from the fruits of his labor. He does not take
them to be his achievement but a dedication to the Lord.

In the same way he is not disturbed by failures. He attributes them to the Lord and gets along.
Thus he is detached in his actions by virtue of his knowledge and understanding.

மோட்சத்தை,பிரம்மனை அடைய கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய மூன்று வழிகள் கீதையில் கூறப்படுகிறது.

ஞான யோகம் என்பது (வாழ்க்கையைப் பிறர் உதவியின்றி, தானாகப் புரிந்து கொள்ளும்) அறிவை அடிப்படையாகக்
கொண்டது. ஞானயோகி மோட்சம், பிரம்மன் என்பது ஒரு தத்துவம், விளக்க முடியாத , புரிந்து கொள்ள வேண்டியது என்று
தெரிந்தவர். பலனை எதிர்பார்க்காது செயலாற்றுபவர். அந்தப் பலன்கள் தனக்குரியதல்ல, இறைவனுக்கு அர்ப்பணம் எந்று கருதுபவர்.
தோல்விகளைக் கண்டு துவளாதவர்.அவை இறைவைனுடைய செயல் என்று புரிந்து முன்னேறிச்செல்பவர். தன்னுடைய அறிவும்
புரிதலும் கொண்டு தன் செயல்களின் விளைவுகளில் இருநது ஒதுங்கி வாழத் தெரிந்தவர்.

In Bakthi-yoga ,the individual is not bothered about the meaning of detachment or about
the Brahman. But he is devoted to the Lord and does every thing in his name. He is totally a dedicated
person. Because of such an unstinted faith he is able to be detached and see the pairs of opposites as
one before God.

பக்தி யோகி , "ஒருவர் தன் செயல்களின் விளைவுகளால் பாதிக்கப் படாமல் வாழ வேண்டும்,மோட்சம் போன்ற
கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கவலைப் படாதவர். கடவுளை மட்டும் முழுமையாக நம்பி தன் செயல்களின்
பலன் அனைத்தும் கடவுளுக்கு அர்ப்பணிப்பவர். மாறாத கடவுள் நம்பிக்கை அவருக்குப் பலன் எதிர்பாராத, வெற்றி தோல்விகளைச்
சமமாகப் கருதும் மனநிலையை அளிக்கிறது.

A karma-yogi never has an idea of God and does not worry about it. He discharges his
assigned duty sincerely .The outcome of his work will not bother him so long as he is sure of having
done his part of the work properly and sincerely.

கர்ம யோகி கடவுள், மோட்சம் ஆகியவற்றைப் பற்றித் தெரியாதவர், தெரிய முயலாதவர். தன் கடமையைச்
செம்மையாகச் செய்பவர். தன் கடமையைச் செம்மையாக, முழுமையாகச் செய்தபின், அதன் விளைவில் பாதிக்கப் படாதவர்.

kural also gives three forms of service to the society. Perarivalan (பேரறிவாளன்) Nayanudaiyan (நயனுடையான்),
perunthakaiyana (பெருந்தகையான்) .

திரூக்குறளும் சமூக அமைதிக்கான மூன்று வகையான சேவைகளைக் கூறுகிறது. அவையாவன :பேரறிவாளன்,நயனுடையான், பெருந்தகையான்
ஆகும்.

Perarivalan


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 215


The wealth of 'Perarivalan' is like the village drinking-water pond full of water.

Water is an essential life-giving and life-saving commodity. The Pond feeds the people of the
village with water without any discrmination. The water can be fetched till the pond is emptied. There
is no limit.

Perarivalan is one who , like the pond, is willing to give his last to the needy without
discrimination. This act comes out of one's understanding of the socity and its problems. Also the
purpose of wealth has no relevence if it is not utilised properly. There is no better cause than the
social cause to expend his wealth. Such a revelation and understanding is needed for one to behave the way
of perarivalan.

This is simialar to karma-yoga

பேரறிவாளனுடைய செல்வம் ஊரடியில் உள்ள குடிநீர் நிறைநத ஊருணி போன்றது.

தண்ணீர் உயிர் காக்க, உயிர் அளிக்க மிகவும் தேவையானது. ஊருணி ஊர் மக்களின் தேவைக்கான தண்ணீரை
எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் அளிக்கிறது. நீர் இருக்கும் வரை எப்போதும் நீர் எடுத்துக் கொள்ளலாம். தடை
எதுவும் கிடையாது.

மக்களையும் அவர்கள் எதிர்க் கொள்ளும் துயரங்களையும் புரிந்த காரணத்தால், பேரறிவாளன், ஊருணியைப் போல்,
தன்னிடம் செல்வம் இருக்கும் வரை எந்த வித்தியாசமும் பாராமல் வறியோருக்கு வழங்குவான். சரியான வழியில் பயன்படாத
செல்வத்திற்கு மதிப்பில்லை. வறியவருக்கு ஈவதை விடவும் சிறந்த செலவு ஏதுமில்லை. இது போன்ற தெரிதலும், புரிதலும்
கொண்டவனே பேரறிவாளன்.

இது கீதையின் கர்ம யோகத்திற்கு இணையானது எனக் கொள்ளலாம்.


Nayanudaiyan


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். 216

The wealth in the hands of Nayanudaiyan is like the delicious ripened fruit hanging
on the tree near the local village.


Tree yielding delicious fruits to eat is an immediate succor to the hunger-striken. The
wealth of Nayanudaiyan is of similar nature.

The fruit may relieve from hunger. It cannot be compared with water, which is life-saving.
One can go hungry for days; but cannot go without water for a few hours. Nayanudaiyan is not bothered
about the niceties of help; perhaps they are beyond his comprehension. But he knows the pains
of hunger. So he will dedicate his wealth by giving food to the hungry, like the fruit-yielding tree.

This is similar to Bakthi-yoga

நயனுடையானுடைய செல்வம் ஊருக்குள்ளே பழுத்த பழங்களைக் கொண்ட மரம் இருப்பதைப் போன்றது.

பழ மரங்கள் கொடுக்கும் உண்ணக்கூடிய பழுத்த பழங்கள் பசிப்பிணியை உடனடியாக ஆற்றும். நயனுடையாளது
செல்வம் அத்தகையது.

பழம் பசியை ஆற்றலாம். ஆயினும் அது உயிர் காக்கும் நீரைப் போலாகாது. பல நாட்கள் பசியுடன் வாழலாம். ஆனால்
சில மணி நேரம் கூட நீரின்றி இருக்க இயலாது. இது போன்ற வேற்றுமைகளை நயனுடையான் கருதுவதில்லை. அதைப்
புரிய இயலாதவராகவும் இருக்கலாம். அவர் பசியின் கொடுமை புரிந்தவர். அவர் தன் செல்வம் அனைத்தையும் வறியோர்
பசி தீர்க்கவே, ஒரு பழமரம் போல், பயன்படுத்துகிறார்.

இது கீதையின் பக்தி யோகத்திற்கு இணையானது எனக் கொள்ளலாம்.

perunthakaiyan


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான் கண்படின். 217

Wealth in the hands of perunthakaiyan is like the herbal tree which is a remedy to diseases.

This person takes the service to the society with his wealth with a difference. When somebody
needs help , just giving money or food may not be a solution to his sufferings. So he understands the
individual needs and extend his help accordingly. Like the herbal tree yielding thr right herbs to the
diseased, this person extends the right type of help needed to the situation.
When the the roots of the tree is a remedy, people dig the earth and cut the roots. The tree
yields to persons in such a situation too surrendering its very life. This Perarivalan is also willing to
give his life if it helps the society.

This is similar to Njana-yoga


பெருந்தகையான் கொண்ட செல்வம் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரம் போன்றது.

பெருந்தகையான் தன் செல்வத்தால் வறியோருக்கு உதவுவது வித்தியாசமானது. சிலரது துன்பங்கள் பணத்தாலோ,
உணவாலோ தீராது. இதை உணரும் பெருந்தகையான் அவரவர் தேவையறிநது உதவுபவர் ஆவார். மூலிகை மரங்கள்
எப்படி வியாதிக்கேற்ற மூலிகையை அளிக்குமோ, அது போன்று பெருந்தகையான் வறியோர் தேவை அறிந்து உதவுவார்.

மருந்தாக வேர்கள் தேவை என்றால், மூலிகை மரம் தன்னை அழித்து வேர் கொடுக்கும். அது போல் பெருந்தகையான்
சமூக நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கவும் தயங்கார்.

இது கீதையின் ஞான யோகத்திற்கு இணையானது எனக் கொள்ளலாம்.


அற்றார் அழிபசி தீர்த்கல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226

The very purpose of the wealth in the hands of the rich is to satiate the killing hunger
of the have-nots.


Thus the wealth of the rich is to be dedicated to the society. This concept can developed to show
that Gandhian Trusteeship is what this verse speaks of.

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை தனக்குப் பிற்காலத்தில்
உதவுமாறு சேர்த்து வைக்கும் இடம் ஆகும்.

செல்வம் படைத்தவர் தன் செல்வத்தை சமூகப் பணிகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இக்கருத்து காந்தி அடிகளின்
தருமக்கர்த்தா முறையின் அடிப்படையாகும்

11.சத்வ, இராசச, தாமச /three gunas

In Gita moods of men are classified into three groups. Satva, Rajasa and tamasa. In individuals
one of them may predominate at a given time. But Except for the first the other too groups are Condemned
in that order. Kural classifies men in three categories.


ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்
போஓம் அளவும்ஓர் நோய். 848


He listens not nor himself knows Plague is his life until it goes.


In this verse the poet talks about the person who neither knows nor act on given instructions.
Thus the poems classifies persons who are
(i) knowledgable themselves
(ii) act on given instructions i.e., people who can learn from others and
(iii) neither of the above.

This classification can be seen to be comparable to the one in Gita .


கீதை மனிதரின் மன நிலையை மூன்று வகையாகப பிரிக்கிறது,சத்வ, இராசச, தாமச குணங்கள் . ஒரு நேரத்தில் ,ஒருவனிடம்
இந்த மூன்று குணங்களில் ஒன்று உயர்ந்து நிற்கும். சத்வ குணத்தை தவிர மற்ற இரண்டும் முறையே கெட்டது என்கிறது கீதை. குறளும்
மனிதனின் மன நிலையை மூன்றாகப் பிரிக்கிறது.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்
போஓம் அளவும்ஓர் நோய். 848

தனக்கு நன்மையானவற்றை தனக்காகவும் தெரிய இயலாது, பிறர் அறிவுறுத்தினாலும் கேளாது இருப்பவன் வாழ்நாள் முழுவதும்
துன்பமுறுவான்.

இந்தக் குறளின் மூலம் மனிதனை திருக்குறள் மூவகையாகப் பிரிக்கிறது:
i. தன்னாலேயே புரிந்து, தெரிந்து கொள்பவன்
ii. பிறர் அறிவுரையை ஏற்பவன், பிறரைப் பார்த்து புரிந்து கொள்பவன்.
iii. மேற்கண்ட இரண்டு குணங்களும் இல்லாதவன்

கீதையின் மூவகைக் குணங்கள் திருக்குறளின் மூவகைக் குணங்கள் இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.


This classification of individuals are know to the Tamil speaking people as a casual and familiar
statement.

இத்தகைய பிரிவு இன்றும் கிராமங்களில் பேசப்படுவதுதான்:
கிராமங்களில் இரண்டும் கெட்டான் என்று சிலரைச் சாதாரணமாகச் சொல்லுவர். அதாவது தனக்காகவும் தெரியாது
சொன்னாலும் கேட்கமாட்டான் என்று பொருள்.


This is what Gita classifies into satva, rajasa and tamasa.

While Gita puts the last of the category in the condemned list, he has to undergo many more births
to get refined, Kural gives them the means of improving. The do's and dont's in the various chapters
are addressed to the improvement of the last classified group. They need not wait for another birth for
improvement. What if there are still persons who are not able to improve their lot in spite of the advice
given ? it is the social responsibility to care such persons.


இவையே கீதையில், சத்வ, இராசச, தாமச குணங்கள் எனப் படுகிறது,
கீதை, மூன்றாவது பிரிவினர் சபிக்கப்பட்டவர்களாகச் சொல்கிறது. அவர்கள் பல பிறவிகளுக்குப் பின்னர்தான் உயர்நிலை பெறுவர்.
அவர்கள் உயர்வதற்கான வழிமுறைகள் பல குறட்பாக்களால் சொல்லப்படுகிறது. அவர்கள் பல (இல்லாத) பிறவிகளில்
உழல வேன்டியதில்லை.குறட்பாக்களில் கூறிய அறிவுரைகளுக்குப் பின்னும் அவர்கள் வளரலில்லை என்றால்....? அவர்களுக்கு
உதவுவது சமுகக் கடமை ஆகும்.


12.பலன் கருதாமை .

We give below the relevent verses in both th works without any further comments:

2.38 Having made pleasure and pain, gain and loss, victory and defeat the same, engage thou in battle
for the sake of battle; thus thou shalt not incur sin.

சுகமும்,துக்கமும், லாபமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும் சமமாகப் பாவித்து யுத்தத்திற்கு முனைவாய். அதனால்
ஒரு பாபமும் உன்னை அணுகாது.

2.47 Thy right is to work only, but never with its fruits; let not the fruits of actions be thy
motive, nor let thy attachment be to inaction.

உன்னுடைய உரிமை செய்யும் காரியம் மட்டுமே.காரியத்தின் முடிவும் பலனும் உன் உரிமையல்லவே அல்ல.
பயனில் ஆசை செலுத்தி எதையும் செய்யாதே. இதைச் சொன்னேன் என்று செய்ய வேண்டியன செய்யாமல் சும்மா
இருந்து விடுவதில் மனம் செலுத்தாதே.

2.51 The wise, possessed of knowledge, having abandoned the fruits of their actions, and being freed
from the fetters of birth, go to the place which is beyond all evil.

செய்யும் செயலில் உள்ள பயனை ஆசைப்படாமல் துறந்து வாழ்க்கை நடத்தும் அறிஞர்கள், பிறவித் தளையினின்று விடுபட்டு
நோயற்ற உயர் பதவியை அடைவார்கள்.

4.22 Content with what comes to him without effort, free from the pairs of opposites and envy,
even-minded in success and failure, though acting, he is not bound.

கிடைத்த நற்பயனைக் கொண்டு திருப்தி அடைந்து, சுகம் துக்கம் இரண்டையும் கடந்தவனாய் பொறாமையை விலக்கியவனாய்
எண்ணியது கைகூடிய போதும் கை கூடாத போதும் சம நிலையில் நிற்பவன் செயலில் ஈடுபட்டாலும் வினைப் பயனிலிருந்து
விடுபட்டவனே ஆவான்.

12.18. He who is the same to foe and friend, and in honour and dishonour, who is the same in cold and
heat and in pleasure and pain, who is free from attachment

12.18 பகைவனும் நண்பனும் ,புகழும்,பழியும்,குளிரும்,வெப்பமும், சுகமும்,துக்கமும் சமமாகப் பற்றின்றி பாவிப்பவன்...


இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். 628


The person who does not expect any reward for his actions, takes the hardships of life as
routine, is never hurt.


இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். 369


If one is neutral to the rewards for his good work will always be at peace.


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். 629


The person, who is not carried away by the rewards for his good acts, is not disturbed by
failures,



இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். 623


Those who are not disturbed by hardships will make hardships disappear.

13.குறள் மற்றும் கீதையின் காலம்/Date of kuRaL and Gita.

Our study will be incomplete if we do not discuss the dates of the two works. Thiruvalluvr's period
cannot be later than the second century BCE. This is ascertained in [6], page 130 and135:

“1. The Ceylon traditions assign his contemporaneity with Elela or Alara of Ceylon who flourished
from 144 to 101 B.C.

5. Mamulanar, an accredited Sangam poet, from the fact of his referring to the flooding of the
Ganges on the city of Pataliputra, and his non-mentioning of the fire which consumed it later on, must
have lived at the commencement of the Christian era or even before. His reference to the Kural is valuable
as it shows beyond doubt that Valluvar lived before him or at least was his contemporary.

7. The Silapadikaram which cannot be later than the end of the second century A.D. quotes with
approval from the extant Tirukkural. To quote a work as authority it must have been popular for some
time and there is thus an irrefutable testimony to point out that it was a composition much older than
the Silappadikaram.”


குறள், கீதை ஆகியவற்றின் காலத்தை கணக்கில் எடுக்காமல், இந்தக் விவாதம் முடிவடையாது.

திருவள்ளுவரின் காலம் கி.மு. 200 க்கு பிற்பட்டதாக இருப்பது இயலாது. இது [6] பக்கம் 10,133-135 ல்
காணப்படுகிறது.

"1. கி.மு 144 முதல் 101 வரை செழித்திருந்த அலரா என்ற ஏலேலா திருவள்ளுவரின் சம காலத்தவராக இலங்கை
மரபுகள் கருதுகின்றன.

5. பாடலிபரத்தில் ஏற்பட்ட கங்கை வெள்ளத்தைக் குறிப்பிட்ட மாமூலனார் என்ற புகழ் பெற்ற சங்கப் புலவர் ,அதற்குப்பின்
ஏற்பட்ட தீ விபத்தைக் குறிப்பிடவில்லை. ஆதலின் அவர் காலம் ஏசுநாதரின் காலமாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருக்கலாம்.
அவர் திருக்குறளைக் குறிப்பிட்டிருப்பது, திருவள்ளுவர் அவர் காலத்துக்கு முறபட்டவராகவோ அல்லது குறைந்த பட்சம் சமகாலத்தவரா
கவோ இருக்கலாம் என்ற முடிவைத் தெளிவாக வலியுறுத்துகிறது.

7. சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறபட்டதாக இருக்க முடியாது. இந்நூலில் திருக்குறளில் இருந்து
நிறைய மேற்கோள்கள் காணப்படுகின்றன. மேற்கோள் காட்டும் அளவிற்கு திருக்குறள் அதற்குமுன் பல காலமாகவே மிகவும் பெருமை
பெற்றிருக்க வேன்டும். இது திருக்குறள், சிலப்பதிகாரத்துக்கு சமகாலத்ததாகவோ அல்லது அதற்கு முற்பட்டதாகவோ
இருக்க வேண்டும் என்பதற்கு மறுக்க முடியாத சான்று ஆகும் என்பது விளங்கும்.ட


Now coming to Gita :

Gita must be later than that of the Sankya's philosophy because in chapter.2 it is discussed elaborately
and the chapter is named 'sankhya yoga'.The supposed author of Sankhya's philosophy , “Kapila,...... ..
must have lived before the sixth century B.C. , and yet the classic texts of the philosophical system that
he is said to have founded belong to a much later date. The important Sankhya-karika of Isvarakrsna was
composed in the middle of the fifth century A.D., while the Sankhya-sutras, the work ascribed traditionally
to the hand of Kapila himself, cannot he dated earlier than 1380-1450 A.D.” ([7,] page282).

` If a particular date is accepted for the Upanishads or Gita, then our understanding is that the
concepts of these works were in use after that date. But in the case of kuRaL it is the other way: If a
particular date accepted for the writing of kuRaL , then we have to conclude that the ideas of the work
were prevalent earlier than that date. Then it is a question of how long before?


இப்போது கீதையின் காலம் பற்றி விவாதிப்போம்.

கீதையின் இரண்டாவது அத்தியாயம் சாங்க்யத் தத்துவத்தை விளக்குகிறது. இரண்டாவது அத்தியாயம் 'சாங்க்ய யோகம்'
என்றே பெயரிடப்பட்டு இருக்கிறது. சாங்க்யத் தத்துவத்தின் ஆசிரியர் கபிலா என்பவர் கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்
வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும் அவரால் நிறுவப் பட்டதாகச் சொல்லப்படும் சாங்க்ய தத்துவம் பற்றி எழுதப்பட்ட நூல்கள்
அவருக்கு மிகவும் பிந்திய காலத்தில் எழுதப்பட்டனவாக உள்ளது.ஈஸ்வரகிருஸ்நா என்பவாரால் எழுதப்பட்ட சாங்க்யகாரிகா என்ற நூல்
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடையில் எழுதப்பட்டது. கபிலா எழுதியதாகக் கருதப்படும் சாங்க்ய-சூத்திரங்கள் கி.பி.
1380- 1450 A.D காலத்திற்கு முன்னதாக இருப்பது இயலாது. ([7,] பக்கம் 282).

உபநிடதங்கள்,கீதை இரண்டும் அவை எழுதப்பட்ட காலத்திறகுப் பின்னர்தான் புழக்கத்திற்கு வரும். ஆனால் திருக்குறள்
அது எழுதப்படுவதறகு முன்னர் இருந்த நடைமுறைகளை, எண்ணங்களைப் பதிவு செய்கிறது.ஆகவே திருக்குறளின் காலம் என்றால்
அதில் கூறப்பட்ட கருத்துக்கள், அது எழுதப்படுவதற்கு முன், எவ்வளவு காலமாகக் கடைபிடிக்கப் படுகிறது என்று பொருள் கொள்ள
வேண்டும்.


The above observations confirms that kuRaL is much earlier than Gita. We give another approach to
determine the relative dates of the works, which one is earlier and which one later.

The development of ideas in kuRaL is practical and logical . First chapter is on importance of
education through a proper teacher. This interpretation [8] of this chapter differs from the usual one
due to Pari-mel-azhagar. Next about the importance of rain and the respect to the dead family elders who
have lived a life of aRam. Then the housewife, children, hospitality towards guests,and the do's and don'ts
for a good life which is necessary for the social tranquility and peace. Then he talks about life outside
the household. After the discussions, all of them with a slant towards social welfare and peace, finally
he talks about the purpose of life, fame and glory, and how one can achieve them. A denial of Aryan concepts
which were seeping into the Tamil-land are also discussed.

The development of ideas are logical and arrived at after trial and error by the Tamil society.
That is the way societies develop anywhere in the world. The geographical location of the Tamil-land gave
the people a lot of leisure and comforts in life that they were able to develop a well-structured society
and literature dealing with many facets of human life.


மேற்கண்ட கருத்துக்கள் மூலம் குறள், கீதையை விடவும் காலத்தால் மிக முற்பட்டது என்பது தெளிவாகிறது.இந்நூல்களில் எது
முந்தியது எது பிந்தியது என்பதை வேறொரு கோணத்திலும் காண்போம்.

திருக்குறளின் கருத்துக்கள் நடைமுறைகட்கும், விவாதங்கட்கும் உட்பட்டு எழுந்தவை.முதல் அதிகாரம் தகுந்த ஆசிரியரிடம்
பெறவேண்டிய (வாழ்க்கைக்) கல்வியின் தேவையைக் கூறுகிறது. இந்த அதிகாரத்திற்கான விரிவுரை [8] வழக்கமான பரிமேலழகரின்
உரையினின்றும் முற்றிலும் மாறுபட்டது. அதன் பின் மழையின் சிறப்பு,அறவழி வாழ்ந்த முன்னோரை பின்பற்றுதல் சொல்லப்படுகிறது.
பின்னர் குடும்பத்தில் பெண்ணின் பங்களிப்பு,மக்கட்பேறு, விருந்தோம்பல், நடைமுறையில் சமூக அமைதியும் நிம்மதியும் நிலைக்க
ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை, செய்யத் தகாதவை சொல்லப் படுகிறது.பின் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட சமூக வாழ்க்கை
பேசப்படுகிறது. சமூக வளர்ச்சி , நிம்மதி ஆகியவற்றை கூறியபின் முடிவாக மனித வாழ்வின் குறிக்கோள், புகழ், விவாதிக்கப் படுகிறது.
புகழ் என்பதன் பொருள், அதை அடையக் கூடிய வழிகள் பற்றிக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தென்னாட்டில் பரவத் தொடங்கிய
ஆரிய வேதக்கருத்துக்களுக்கு மறுப்பும் சொல்லப்படுகிறது.

தமிழ்ச் சமூத்தின் இந்தக் கருத்துக்கள், புழக்கத்தில் இருக்கும் போதே தோன்றும் குற்றங் குறைகளை அவ்வப்போது திருத்தி
நேர் செய்யப் பட்டவை. ஆரம்ப காலத்தில் சமூகங்கள் இந்த முறையில்தான், அவ்வப்போது தோன்றும் தவறுகளைக் களைந்து,வளர்ந்தன
என்பதை மனதில் கொள்ள வேண்டும். நல்ல பருவநிலை, குளிர், வெப்பம் இரன்டும் சம அளவிலும், தேவையான மழையும் நதிகளும்
வாழ்க்கையைச் இலகுவாக்கி விட்டதால், அன்றைய தமிழறிஞர்கட்கு மனித வாழ்க்கை பற்றிய கருத்துக்களின் தேடலில் தங்கள் நேரத்தைக்
கழிக்க இயன்றது. அதன் விளைவாகத் தமிழகத்தில் அந்த நாளிலேயே ஒரு முழுமையான சமூகமும், சமுக அமைப்பும் , இலக்கிய, தத்துவ
சிந்தனைகளும் தோன்றி வளர்ந்து நிலைக்கலாயிற்று.


Coming to Gita, it is epitome of Upanishads.

When the aryans migrated they chanted the hymns . They are in praise of the natural forces, rain,
thunder, fire etc. Then they changed their prayers to different gods. (“The process of god-making in the
factory of man's mind cannot be seen so clearly anywhere else as in the rig-Veda” :S.Radhakrishnan,
Indin Philosophy vol 1. page 73)

At this stage it was rituals, animal sacrifices, mantra, tantra and black-magic and the like. A stage
came when people started questioning these practices. They lost faith in them. Buddhism became popular
challenging th Vedic religion.

By this time Aryans have already entered into the Tamil-land. Aryans were under pressure to redeem
their influence over the masses. They need to give a new look to their religion, without rituals, animal
sacrifices etc. Such a new religion , to be developed under pressure, cannot be evolved without a model
to start with. Except for the Tamil culture there was no other model available and suitable . They took
many of the salient features of the practices of the Tamils and remodelled it to suit the then existing
vedic frame work, as we have discussed above.

கீதை உபநிடதங்களின் சாரம்.ஆரியர்கள், இடம் பெயர்ந்து, குடியேற வரும்போது பாடிய வழிநடைப் பாடல்கள்தான் வேதங்கள் என
அழைக்கப்பட்டன. அவை இயற்கையில் தோன்றும் மழை, புயல்,இடி,மின்னல் முதலியவற்றைக் கடவுளராக எண்ணிப் புகழும் பாடல்கள்
ஆகும். ஆனால் பின்னர் அவர்கள் வேறு பல கடவுளரை வணங்கலாயினர்.(இருக்கு வேத ஆரியர்களைப் போல், பதுப் புதுக் கடவுளரை
உற்பத்தி செய்யும் தொழிலில் சிறந்தவர்களை மனித இனத்தில் வேறெங்கும் காண இயலாது: S.Radhakrishnan, Indin Philosophy
vol 1. page 73)
இந்தக் கால கட்டத்தில் மதச்சடங்குகள், மிருகக் காவு, மந்திர தந்திரங்கள், பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளைப்
பரப்பினர். சில காலத்திற்குப் பின் மக்கள் இந்தச் சடங்குகளைப் பற்றி எதிர்க் கேள்விகள் எழுப்பலாயினர். சடங்குகளில் நம்பிக்கை
இழந்தனர். புத்த மதம் தோன்றி வேத மத நம்பிக்கைகளை மறுத்துக் கருத்துக்களைப் பரப்பியது.மக்கள் புத்த மதத்தைத் பெருவாரியாகத்
தழுவினர்.
இந்த நிகழ்வுகளுக்கு இடையில் ஆரியர்கள் தமிழகத்தில் வந்து குடியேறலாயினர்.ஆரியர்கள் இழந்த பெருமையைத் திரும்பப்
பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருந்தனர். அவர்கள் மதத்திற்கு, வேத மதத்திற்கு, மதச்சடங்குகள்,மிருகக் காவு முதலியன
அற்ற புது உருவம் தேவைப்பட்டது. இது போன்ற கட்டாயச் சூழலில் , ஒரு புதுத் தத்துவத்தை உண்டாக்க அவர்களுக்கு ஒரு முன் மாதிரி
தேவைப் பட்டது. தமிழர்களது பண்பாடு, நாகரிகம்தான் அவர்கள் பார்வையில் இருந்தது என்பது மறுக்க இயலாத உண்மை. தமிழ் நாகரிகம்,
பண்பாடு இவற்றை ஏற்று அவைகளைத் தங்கள் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப எப்படித் தங்கள் மதத்தை
மாற்றிக் கொண்டனர் என்பதைத்தான் இக்கட்டுரையின் முன் பகுதிகளில் கண்டோம்.

"Ano Bhadraaha Kritao Yantu Vishvataha - let noble thoughts come to us from all sides "- rig veda
எல்லாப் பக்கங்களில் இருந்தும் உயர்ந்த எண்ணங்கள் நம்மை வந்து சேரட்டும்- இருக்கு
வேதம்.


“…..If the unassisted reason of man cannot attain any hold on reality by means of mere speculation,
help may be sought from the great writings of the seers who claim to have attained spiritual
certainty. ....” [5, Page 19]

".....பகுத்தறிவு இல்லாத மனிதன் கற்பனையினால் மட்டுமே உண்மையை அறிய இயலாத நிலையில், அறிவுத்
திறனில் உயர் நிலை எய்திய பெரியோர்களின் கருத்துக்களை நாடுவதில் தவறில்லை....[5, Page 19]


“from primitive polytheism to systematic philosophy it is a long, long way.” S.Radhakrishnan,
Indin Philosophy vol 1. page 72

" அரைகுறையான , பற்பல கடவுளரைக் கொண்ட, நிலையில் இருந்து ஒரு ஒழுங்கமைந்த தத்துவ சிந்தனை அடைவது ஒரு
மிக நெடிய நீண்ட பயணம்" S.Radhakrishnan,Indin Philosophy vol 1. page 72

Acknowledgment:The author wishes to express his thanks to Dr.Amod Lele of Boston University for
his suggestions to improve the draft.

14.பயன்படும் பிறநூல்கள்/ Reference.

1. G.U.Pope : ThirukkuRaL :English translation
http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0153.pdf

suddhananda bharathy: ThirukkuRaL :English translation
http://projectmadurai.org/pm_etexts/pdf/pm0017.pdf

2. Swami Sivananda Sarawati Tr. : The Bhagavad Gita
Google books.

2a. இராசாசி : கைவிளக்கு, சம்பா நூலகம், பிராட்வே, சென்னை. 1958
(பகவத்கீதையின் தமிழாக்கம்)

3. Sankara Tr. :Brihadaranyaka upanishad:
https://archive.org/details/Brihadaranyaka.Upanishad.Shankara.Bhashya.by.Swami.Madhavanand

4 Hume:Thirteen principal upanishads
https://archive.org/details/thirteenprincipa028442mbp

5. S.Radhakrishnan : Indian Philosophy vols. 1&2:
https://archive.org/details/Sarvepalli.Radhakrishnan.Indian.Philosophy.Volume.1-2

6. V.R.Ramachandra Dikshitar : Studies in Tamil Literature and History
https://archive.org/details/studiesintamilli035036mbp

7. Heinrich Zimmer : Philosophies of India
https://archive.org/details/Philosophy.of.India.by.Heinrich.Zimmer

8. Visweswaran,H.V. : http://tamilinkural.blogspot.in

9. விஸ்வேஸ்வரன் : தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம் (பரிமேலழகர் இங்கே திருத்தப்படுகிறார்)
2016. Buy it from amazon.in


No comments:

Post a Comment